இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர், பாடகர் என பன்முக தன்மைகளைக் கொண்டவர் சாம். சி. எஸ்., கைதி, புரியாத புதிர், விக்ரம் வேதா, ஒடியன், அடங்க மறு ராகெட்ரி, நம்பி விளைவு, இரவுக்கு ஆயிரம் கண்கள், சாம்ஹோய், நோட்டா போன்ற பல படங்களில் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் பிரபல இசை அமைப்பாளர் சாம் சி.எஸ். மீது சினிமா தயாரிப்பாளர் சமீர் அலிகான் என்பவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ் பையன் இந்தி பொண்ணு என்ற படத்திற்கு இசை அமைப்பதற்காக இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.க்கு ரூ.25 லட்சம் முன்பணம் கொடுத்ததாகவும் ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் அப்படத்தின் பணிகள் பாதியிலேயே நின்றதாகவும் குறிப்பிட்டார். தற்போது அப்படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், படத்திற்கு இசை அமைக்காமலும் கொடுத்த பணத்தை திரும்ப தராமலும் சாம் சி.எஸ் ஏமாற்றி வருகிறார் என்றும் சமீர் அலிகான் தனது புகாரில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சமீர் அலிகான் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இசையமைப்பாளர் சாம் சி. எஸ். மீது மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இனி இந்தந்த விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்... சென்னை கமிஷனர் அதிரடி உத்தரவு..!