தமிழக அரசியலில் தற்போது நடந்து வரும் கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர். கோபண்ணா அவர்கள் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சில சலசலப்புகள் எழுந்தன. இதனிடையே, காங்கிரஸ் கட்சி திமுகவுடனான கூட்டணியை மாற்றி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்கள் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.

குறிப்பாக, கட்சியின் நீண்டகால வரலாறு மற்றும் கொள்கைகளை மதிக்கும் பலர் இதை ஏற்க மறுத்தனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய பொறுப்புகளில் இருந்தவருமான ஆர். கோபண்ணா இந்த விவகாரத்தில் தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்தார்.
இதையும் படிங்க: நாங்குநேரி இரட்டைக் கொலை..! இதுதான் சட்டம் ஒழுங்கு லட்சணமா? கொந்தளித்த விஜய்..!!
நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் போன்ற தவெக என்ற கட்சியுடன், 140 ஆண்டுகால வரலாறு கொண்ட காங்கிரஸ் பேரியக்கம் கூட்டணி சேர்வதா? அது தற்கொலைக்கு சமம்" என்று வேதனையுடன் தெரிவித்தார். தவெகவை ஒரு புதிய, அனுபவமற்ற அமைப்பாகவும், அதன் தலைவர் நடிகர் விஜய்யை தனிநபர் அடிப்படையிலான அரசியல் எனவும் அவர் விமர்சித்தார். இந்த கூட்டணி யோசனை கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானது என்றும், இது காங்கிரஸின் இருப்பையே ஆபத்தில் ஆழ்த்தும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: புதிய பாதையில் காங்கிரஸ்? ஹைதராபாத்தில் ராகுல் காந்தி - ஆதவ்... வலுக்கும் சந்தேகம்..!!