கடலூர் மாவட்ட மீனவர்களுக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் தாக்கம் காரணமாக கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாகிய இந்த வானிலை அமைப்பு வலுவடைந்து வரும் நிலையில், நாளை முதல் அக்டோபர் 29ஆம் தேதி வரை கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் அனைத்து வகைப் படகுகளையும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வங்கக் கடலின் மத்திய மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடர்ந்து புயலாகவும் மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா கடற்கரைப் பகுதிகளை நோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தாக்கம் தமிழகக் கடலோரப் பகுதிகளிலும் உணரப்படும் என்பதால், கடல் நிலை மிகவும் மோசமாக மாறும் அபாயம் உள்ளது.கடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவர் கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்கள் இந்தத் தடையால் பாதிக்கப்படவுள்ளனர். விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் இரண்டும் தடைக்கு உட்பட்டவை. ஏற்கனவே கடலுக்குச் சென்றுள்ள படகுகள் உடனடியாகக் கரை திரும்ப வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: திருமாவளவனை வரவேற்க குவிந்த தொண்டர்கள்! மகளிர் கல்லூரிக்குள் நுழைய முயன்றதால் போலீசாருடன் தள்ளுமுள்ளு!
படகுகளை கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கான ஏற்பாடுகளையும் மீன்வளத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.கடல் கொந்தளிப்பு காரணமாக அலைகளின் உயரம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. பலத்த காற்றுடன் கூடிய மழைச் சூழல் நிலவக்கூடும் என்பதால் மீனவர்களின் பாதுகாப்பு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தப் புதிய வானிலை அமைப்பு கூடுதல் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களும் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கடலூர் நகர்மன்றத்தில் பரபரப்பு.. விஜய் ஃபோட்டோவை அகற்றிய திமுக - அதிமுக கவுன்சிலர்கள்!! நடந்தது என்ன??