கடலூர் மாவட்டத்தில் ரயில்வே கிராசிங்கில் சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கு கேட் கீப்பர் தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில், கேட் கீப்பர் தான் விபத்துக்கு காரணம் என வேன் ஓட்டுனரும், விபத்தில் தப்பிய மாணவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ஆலப்பாக்கம் ரயில்வே கேட்டில் இன்று காலை 7:45 மணியளவில் நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்து தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆச்சாரியா தனியார் பள்ளியின் வேன், மாணவர்களை ஏற்றிச் சென்றபோது, ஆளில்லாத அல்லது முறையாக மூடப்படாத ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: "கவாச்" குறைபாடு... காதுலையே வாங்கல..! மத்திய அரசை சாடிய கனிமொழி..!

இந்தக் கோர விபத்துக்கு காரணம் கேட் கீப்பர் தான் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அப்பகுதி மக்கள் வைத்துள்ளனர். விபத்துக்கு காரணமாக கூறப்படும் ரயில்வே கேட்ரி பர்மீது எப்போது சென்று கூப்பிட்டாலும் கண்களை துடைத்து கொண்டு தூங்கிய நிலையிலேயே வெளியே வருவார் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பல நேரத்தில் ரயில் வருவதை கவனிக்காமல் செல்போனில் வீடியோ பார்ப்பதை அவர் வழக்கமாக வைத்திருந்ததாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

பொது மக்களின் குற்றச்சாட்டு ரயில்வே துறையின் விளக்கத்திற்கு முரணாக இருக்கும் நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விபத்து தொடர்பாக பள்ளி வேன் ஓட்டுனரும், மாணவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இது தொடர்பாக பேசிய ஓட்டுனர், தான் கேட் கீப்பரிடம் எதுவும் பேசவில்லை என்றும் தண்டவாளத்தை கடப்பது தொடர்பாக அவரிடம் எதுவும் கூறவில்லை என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார். கேட் கேப்பரை தான் பார்க்கவே இல்லை என்றும் ரயில்வே கேட் மூடப்படாமல் திறந்தேதான் இருந்தது எனவும் கூறியுள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக பேசிய மாணவர், கேட்டை திறக்குமாறு ஓட்டுநர் கேட்கவில்லை என்று கூறினார். கேட் திறந்தே தான் இருந்தது எனவும் வேனில் பயணம் செய்த மாணவர் தெரிவித்துள்ளார். அது மட்டும் அல்லாமல் விபத்து நடந்த பிறகு கூட கேட் கீப்பர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்றும் தெரிவித்தார்.

இதனை அடுத்து, அடுத்த நிறுத்தத்தில் அந்த வேனில் பயணம் செய்ய இருந்த மாணவர் ஒருவர் பேசுகையில், ரயில்வே கேட் மூடப்படாமல் தான் இருந்தது என்றும் ஓட்டுநர் எப்போதும் இதுபோல நடந்து கொள்ள மாட்டார் எனவும் செழியன் தனக்கு நெருங்கிய நண்பர் அவருடன் விளையாடிக்கொண்டே வானில் பயணிப்பை என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சீன அதிபர் ஜி ஜின்பிங் காணவில்லை!! இந்தியாவுக்கு ஆபத்து! உடல்நிலை சரிந்ததா? சகாப்தம் முடிந்ததா?