கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்து தமிழ்நாடு முழுவதையும் உலுக்கிய சம்பவமாக அமைந்தது. இந்த கோர விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர், மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் சின்னகாட்டுசாகை பகுதியைச் சேர்ந்த திராவிடமணியின் மகள், 11ஆம் வகுப்பு மாணவி சாருமதி, தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த விஜயசந்திரகுமாரின் மகன், 6ஆம் வகுப்பு மாணவன் நிமிலேஷ், சாருமதியின் தம்பி, 10ஆம் வகுப்பு மாணவன் செழியன் ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்கு கேட் கீப்பரே காரணம் என கூறப்பட்டு உள்ளது. கேட் கீப்பர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது ஆறு பிரிவுகளின் வழக்கப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபத்து நடந்த இடத்தில் தரைபாலம் அமைக்க ஏற்கனவே அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி இருந்ததாகவும் மாவட்ட ஆட்சியர் அதற்கு ஒரு வருடமாக பதில் அளிக்கவில்லை என்றும் ரயில்வே துறை குற்றம் சாட்டு இருந்தது.

இருப்பினும், பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும் சொல்லப்படும் நிலையில், பல்வேறு பாதுகாப்பு நடைமுறை உத்தரவுகளை ரயில்வே துறை பிறப்பித்துள்ளது. அனைத்து லெவல் ப்ரோ சிங்கிலும் உடனடியாக சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று ரயில்வே துறை அறிவுரை வழங்கி உள்ளது. மிஷன் முறையில் லெவல் கிராசிங் வாயில்களின் இன்டெர் லாக்கை விரைவாக கண்காணிக்க வேண்டும் என்றும் இன்டெர்லாக் பணிகள் மற்றும் கட்டுமானத்திற்காக ரயில்வே பொதுத்துறை நிறுவனங்கள் ஈடுபடலாம் என்றும் கூறியுள்ளது.
அனைத்து லெவல் கிராசிங் வாயில்களிலும் வேகத்தடை எச்சரிக்கை பலகைகள் தரப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. அனைத்து லெவல் கிராஸிங் வாயில்களிலும் 15 நாள் பாதுகாப்பு ஆய்வு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. பள்ளி வேன்மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயில்வே துறை முன்னெடுத்து உள்ளது.
இதையும் படிங்க: இதெல்லாம் கொடுமை... பாதுகாப்பை பலப்படுத்துங்க! உயிரிழந்த மாணவர்களுக்கு விஜய் இரங்கல்..!
இதையும் படிங்க: முக்கியமான லெவல் கிராசிங்... அதெல்லாம் சரி சிக்னலோட ஏன் இணைக்கல? சு.வெங்கடேசன் சரமாரி கேள்வி..!