தமிழகம் முழுவதும் இணையதள வாயிலாக பணம் பறிக்கப்படுவது உள்ளிட்ட சைபர் குற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இதனை தடுக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் ஆங்காங்கே சைபர் குற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில், தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் சைபர் குற்றங்கள் மூலம் 250 கோடி ரூபாய் சுருட்டிய நான்கு பேரை உத்தரபிரதேச சிறையில் இருந்து போலீசார் சென்னை அழைத்து வந்துள்ளனர். 4 பேரும் பங்குச்சந்தையில் முதலீடு செய்து பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மோசடி செய்துள்ளனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த நான்கு பேரை கைது செய்து போலீசார் சென்னை அழைத்து வந்தனர்.
சன்னியம் ஜெய், ஹர்ஷவர்தன் குப்தா, மோகன் சிங், அர்மன் ஆகியோர் வேறொரு வழக்கில் உத்தரபிரதேசம் சிறையில் இருந்த நிலையில், சென்னை அழைத்து வந்தனர். 340 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், நான்கு பேரும் ட்ரான்சிட் வாரண்ட் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் பங்குச்சந்தை மூலமாக இரட்டிப்புகளும் தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார் வந்திருக்கிறது. இந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் ஆய்வாளர் சாந்திதேவி வடக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: ஒரே லிங்க்.. தொட்டதும் பட்டுனு பறந்த பணம்.. பதறி அடித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார்!

இந்த விசாரணையில் இணையதளம் மூலமாக மோசடி செய்த நான்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நபர்கள் கடந்த ஏப்ரல் மாதம் உத்தர பிரதேசத்தில் வேறொரு வழக்கில் கைதாகி இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில், அண்ணாநகர் சைபர் கிரைம் போலீசார் உத்தரப்பிரதேசம் மாநிலம் சென்று அங்கே இருக்கக்கூடிய சிறையில் ட்ரான்சிட் வாரண்ட் மூலமாக நான்கு நபர்களை கைது செய்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி அவர்களை வரும் 30ம் தேதி மீண்டும் ஆஜர் படுத்துமாறு உத்தரவை பிறப்பித்துள்ளார். சன்னியம் ஜெய், ஹர்ஷவர்தன் குப்தா, மோகன் சிங், அர்மன் ஆகியோர் சீனாவை சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து சைபர் மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது.
இதையும் படிங்க: ரவுடியை துடிக்கத் துடித்துக் கொன்ற கும்பல்..! 4 பேரை பிடித்து போலீஸ் தொடர் விசாரணை..!