தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை வெளியாகியுள்ளது. நேற்று அக்டோபர் 27 அன்று மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத் தீவிர புயல் அர்னாப் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அக்டோபர் 28 அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடந்தது.
இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவிழந்து தீவிர புயலாக காலை 8.30 மணி அளவில் ஆந்திரப்பிரதேசம், ஏனாம் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த ஆறு மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும்.
சுமார் 5.8 கிமீ உயரம் வரை தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அதே பகுதிகளில் உருவாகக்கூடும்.
இதையும் படிங்க: ஆந்திராவில் ஆட்டம் காட்டும் அர்னாப் புயல்!! சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று! நாளை காலை வரை ரெட் அலர்ட்!
அக்டோபர் 28 முதல் 30 வரை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அக்டோபர் 31 அன்று மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 1 அன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நவம்பர் 2 அன்று வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவம்பர் 3 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக தமிழக கடலோரப்பகுதிகளில் அக்டோபர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வட தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இனி மழை இல்லை! மாணவர்களின் மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி! தீபாவளி ஷாப்பிங்கிற்கு நல்ல நேரம் என்கிறார் வெதர்மேன்!