வங்கக்கடலில் அர்னாப் புயல் உருவாகியிருப்பதாக செய்தி வந்த பிறகு தமிழக பள்ளி மாணவர்கள் பலரும் இந்த வாரம் முழுக்க விடுமுறை கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல் அந்த எதிர்பார்ப்பை மாற்றியுள்ளது.
இன்று காலை மழை நிலவரம் குறித்து பிரதீப் ஜான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளார். அரபிக் கடலில் உருவான தாழ்வு மண்டலம் தற்போது டெல்டா மற்றும் வட இலங்கை கடற்கரைக்கு அப்பால் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் நாளை முதல் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவித்துள்ளார்.
இன்று தமிழகம் முழுவதும் பெரும்பாலும் மழையின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தின் சில பகுதிகள், கடலூர் மற்றும் சிவகங்கை ஆகிய இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: சென்னை மக்களே கவனம்! இன்று இரவு மீண்டும் ருத்ர தாண்டவம் ஆட காத்திருக்கும் கனமழை! பிரதீப் ஜான் வார்னிங்!
இருப்பினும் மாலை நேரத்திற்குப் பிறகு மழையின் அளவு படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட இலங்கையில் இன்று மிகக் கனமழை பெய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னைக்கு எதிர்பார்க்கப்பட்ட மழை கிடைக்காதது குறித்தும் அவர் விளக்கியுள்ளார். இந்தத் தாழ்வு மண்டலம் முன்னதாக சென்னை – புதுச்சேரி கடற்கரைக்கு அருகில் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனால் அக்டோபர் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் அது தெற்கு நோக்கி நகர்ந்து டெல்டா மற்றும் இலங்கை கடற்கரைப் பகுதியை நோக்கிச் சென்றுவிட்டது. இதன் விளைவாக அந்தப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில் சென்னையில் எதிர்பார்க்கப்பட்ட மழை முற்றிலும் கிடைக்கவில்லை.
அக்டோபர் 27 ஆம் தேதி நண்பகல் முதல் தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அர்னாப் புயல் கிழக்குத் திசைக் காற்றைத் தன்னுடன் ஈர்த்துச் செல்வதால் தமிழகத்தில் பரவலாகப் பெய்து வரும் மழை முற்றிலும் நின்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 1 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நீடிக்கும் என்ற இந்தத் தகவல் பொதுமக்களிடையே பரவியுள்ளது.
இதையும் படிங்க: மக்களே உஷார்! சென்னையை நோக்கி நகரும் கனமழை மேகங்கள்!! 150 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு?!