வங்க கடலில் ஏற்பட்டுள்ள மொந்தா புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 18 கிமீ வேகத்தில் நகர்ந்து கரையை நோக்கி வருகிறது. தற்போது சென்னையில் இருந்து 520 கிமீ, காக்கிநாடாவிலிருந்து 570 கிமீ மற்றும் விசாகப்பட்டினத்திலிருந்து 600 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. ஆந்திராவின் மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து, நாளை காலைக்குள் கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளது. இதனால் கடற்கரையில் மணிக்கு 90-110 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை அமைதியாக இருப்பதால் பொது மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என
எச்சரிக்கையாக இருக்க ஆந்திர மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய நிர்வாக இயக்குனர் பிரகார் ஜெயின் தெரிவித்துள்ளார். புயல் மழையால்மாநிலம் முழுவதும் தேசிய , மாநில பேரிடர் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
விஜயவாடா , திருப்பதி, ஓங்கோல், அனகாபல்லி, ராஜமுந்திரி, சூர்யலங்கா, எலுரு, மற்றும் ராஜம்பேட்டை, விசாகப்பட்டினம், காக்கிநாடா மற்றும் வெங்கடகிரி மாநில பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. நெல்லூர், மச்சிலிப்பட்டினம், பீமாவரம், ஸ்ரீகாகுளம், அமலாபுரம் ஆகிய இடங்களில் தேசிய பேரிடர் குழுக்கள் மீட்பு பணிக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கவுண்டவுன் ஸ்டார்ட்...!! ஆட்டத்தை ஆரம்பித்த ‘மோந்தா’ புயல்... துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்...!
கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் மற்றும் மரைன் போலீசார் மீனவர்களை எச்சரிக்கை செய்வதோடு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புயல் காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்வது தொடங்கியுள்ளது.
இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஓடைகள் மற்றும் ஆற்றங்கரை ஓரத்தில் வெள்ளநீர் செல்லும் பகுதியில், தரை பாலத்தை ஒட்டி வாகனங்களில் மற்றும் பொதுமக்கள் அலட்சியமாக செல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர். பள்ளி கல்லூரிகளுக்கு மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆந்திராவில் நிகழ்ந்த பேருந்து தீ விபத்து... உதவிக்கரம் நீட்டிய மாநில அரசு... நிவாரணம் அறிவிப்பு...!