சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்று காலை 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்கள் குறித்த விவரங்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தற்போது புயல் தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியைக் கடந்து வங்கக்கடல் பகுதியில் நகர்ந்து வருகிறது. இதற்கு முன்பாக நள்ளிரவு நேரத்தில் புயல் சென்னைக்குக் கிழக்கே நிலைகொண்டிருந்தது. இந்நிலையில், தற்போது புயலின் மையப்பகுதி சென்னைக்குக் கிழக்கு-வடகிழக்குத் திசையில் வங்கக்கடலில் நிலைகொண்டு, தமிழக நிலப்பரப்பைக் கடந்து வடக்குப் பகுதியை நோக்கி நகர்ந்துள்ளது.
இதன் காரணமாக மழையின் தீவிரம் சற்று குறைந்துள்ளதாகவும், அதே நேரத்தில் சென்னை, திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் மட்டும் காலை 10 மணி வரை லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING திக்...! திக்...!! - 12 மணி நேரத்தில் அடுத்த புயல்?... இந்த முறை டார்க்கெட் எங்கு தெரியுமா?
இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி, புயலின் மையப்பகுதி சென்னைக்குக் கிழக்கு-வடகிழக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
தொடர்ந்து புயலின் நகரும் வேகம் அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த புயல், தற்போது மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதன் தாக்கம் ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் அதிகமாக இருக்கும் என்றும், அதனை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் கடல் கொந்தளிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மழைக்கான வாய்ப்பு தற்போது ஆந்திர மாநிலப் பகுதிகளில் அதிகரித்துள்ளது. புயலின் பின்பகுதியில் உருவாகும் மழைமேகக் கூட்டங்கள் மட்டுமே திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களின் சில பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், புயலின் சுழற்சியால் அதன் பின்பகுதியில் உருவாகும் மழைமேகக் கூட்டங்கள் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை நோக்கி நகரக்கூடும் என்பதால், இன்று காலை 10 மணி வரை ஆங்காங்கே ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தப் புயல் இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இரவு 11.30 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரையிலான நேரத்தில் கரையைக் கடந்து முடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது புயல் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இருப்பினும், கரைக்கு அருகில் வரும்போது அதன் நகரும் வேகம் குறையக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், புயலின் நகரும் வேகத்திற்கு ஏற்ப காற்றின் போக்கிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நள்ளிரவு நேரத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக, அதிகபட்சமாக சென்னை மாதவரம் பகுதியில் 11 செ.மீ. மழையும், எண்ணூர் துறைமுகப் பகுதியில் 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இதேபோன்று நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் 10 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை தொடர்ந்து மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் மழை தீவிரமடையுமா.? எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்.! வானிலை அப்டேட்.!!