இந்தியாவில் GAS சிலிண்டர் தட்டுப்பாடு என்ற பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ளது. இது உலக அளவிலான புவிசார் அரசியல் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள ஒரு பெரிய தாக்கம். முக்கிய காரணம் மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல். ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், உலகின் மிக முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து பாதை தடைபட்டது. வணிக உபயோக சிலிண்டர்களின் விநியோகம் பல இடங்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பெங்களூரு, சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் ஹோட்டல்கள், உணவகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நெல்லை ஜங்ஷன் சாந்தி ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடால் அல்வா தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஈரான் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் பதற்றம் காரணமாக தமிழக முழுவதும் வர்த்தகத்திற்கு பயன்படுத்தக்கூடிய கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு பெரிய அளவில் இருந்து வருகிறது. இதனால் நெல்லை மாவட்டத்திலும் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து வணிக வளாகங்கள், ஓட்டல்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நெல்லைக்கு அடையாளமாக இருக்கக்கூடிய திருநெல்வேலி அல்வா தயாரிப்பும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதை பிரத்தியேகமாக தயாரிக்க கூடிய ஒரு சில நிறுவனங்கள் நெல்லையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நெல்லை ஜங்ஷன் பகுதியில் செயல்படும் சாந்தி ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தினால் இன்று முதல் அல்வா தயாரிப்பு நிறுத்தப்பட்டு இருப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: ப்ளீஸ்..! மாற்று எரிசக்தியை பயன்படுத்துங்க... மத்திய அரசு வேண்டுகோள்..!!
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அதிக அளவில் இருந்து வந்த நிலையிலும் ஒரு சிலிண்டர்கள் கிடைத்ததால் அதை வைத்து அல்வா தயாரித்துக் கொண்டிருக்கின்றனர். இருந்தபோதிலும் ஜாங்கிரி லட்டு மற்றும் இதர இனிப்பு வகைகள் நிறுத்தப்பட்டிருக்கிறது அல்வா மட்டும் தயாரிக்கப்பட்டு வந்திருக்கிறது. இன்று முதல் கேஸ் சிலிண்டர்கள் கிடைக்காததால் அல்வா தயாரிப்பும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: 1000 கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கல்..! ஏஜென்சி உரிமையாளரை கையும் களவுமாக கைது செய்த அதிகாரிகள்..!