சென்னை ஏழுகிணறு பகுதியில் உள்ள எம் எஸ் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பின்புறத்தில் உள்ள கூவம் கரையோரத்தில் கடந்த எட்டாம் தேதி 25 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து ஏழுக்குணறு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி இருந்தனர். அப்போது உடலில் காயங்கள் இருந்ததால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையை போலீசார் துரிதப்படுத்தியனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இறந்து கிடந்த நபர் திருப்பதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசலி எனும் நாயுடு என்பது தெரியவந்தது. பின்னர் திருப்பதியைச் சேர்ந்த சிவக்குமார், கோபி, தாசர், சந்திரபாபு மற்றும் அவரது துணைவி வினுட்டா கோட்டா ஆகியோர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீனிவாசலி என்பவர் காலஸ்திரி ஜனசேனா கட்சியின் பொறுப்பாளர் வினுதா கோட்டா என்பவர் வீட்டில் 15 வயதில் இருந்து வேலை செய்து வந்த நிலையில் தங்களிடம் பணியாற்றி விட்டு எது தரப்பைச் சேர்ந்தவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தங்களது துரோகம் இழைத்து விட்டதாகவும் இதன் காரணமாக ஷோரூம் குடோனில் கட்டி வைத்து அடித்து சித்திரவதை செய்ததாகவும் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஸ்ரீனிவாசலி சித்திரவதை தாங்காமல் தனது கழுத்தை கயிற்றால் நெருக்கி உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் சடலத்தை மறைப்பதற்காக காளஹஸ்தியிலிருந்து உடலை கொண்டு வந்து பேஸின் பாலம் கூவம் அருகே வீசிவிட்டதாகவும் கூறி உள்ளனர். தாங்கள் கொலை செய்யவில்லை என்றும் சித்தரவதை செய்ததாகவும், அது தொடர்பான சிசிடிவி ஆதாரங்கள் ஷோரூம் இல் இருப்பதாகவும் கூறிய நிலையில் ஏழுகிணறு போலீசார் காளஹஸ்திக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஈரானில் "ஆப்ரேஷன் சிந்து"...இந்தியர்களை மீட்க ஆக்ஷனில் இறங்கிய இந்தியா!
இதையும் படிங்க: புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!