தமிழ்நாடு காவல்துறையின் உயரிய பொறுப்பான சட்டம் ஒழுங்கு தலைமை இயக்குநர் பதவியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 1994-ம் ஆண்டு பேட்ச் இந்தியக் காவல் பணி அதிகாரியான மகேஷ் குமார் அகர்வால், தமிழ்நாட்டின் புதிய காவல்துறைத் தலைமை இயக்குநராகவும் போலீஸ் படைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக அப்பதவியில் இருந்த சந்தீப் ராய் ரத்தோருக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் மே மாத இறுதியில் அறிவிக்கப்பட்டு, இன்று அவர் பொறுப்பேற்றார். கோப்புகளில் கையெழுத்திட்டு புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் போதை பொருட்கள் பழக்கத்தை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.

தமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள மகேஷ் குமார் அகர்வால் காவலர் நினைவு சின்னத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முதல்வர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதையடுத்து,
இதையும் படிங்க: மொழி TO மாநில உரிமை வரை..! கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்... புகழாரம் சூட்டிய முதல்வர் விஜய்..!!
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது குறித்து புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வாலுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் நிர்மல் குமார் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: #BREAKING: தவெக அரசின் அதிரடி மூவ்... தமிழகம் முழுவதும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்..!! முழு விவரம்..!!