தாய், குழந்தைகள் 4 பேரின் உடல், கிணற்றில் சடலமாக மீட்பு-கொலையா? தற்கொலையா என காவல் துறையினர் விசாரணை
தர்மபுரியை அடுத்த தொக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி அம்சா (35) இவரது மகள்கள் ஜீவிதா (16) நவீனா (6) மகன் குமரன் (3) ஆகியோர் கடந்த 19ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில் வீட்டிலிருந்து காணாமல் போய் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று 8 மணி அளவில் இவரது வீட்டிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரம் உள்ள அம்சாவின் தந்தை நிலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே உள்ள கிணற்றில் நான்கு பேரும் சடலமாக மிதந்துள்ளனர்.
இதையும் படிங்க: 24 இடங்களில் வெட்டு... தங்கைக்கு அண்ணன் செய்த கொடூரம்... வாக்குமூலத்தில் சொன்ன பகீர் காரணம்...!
சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த அதியமான் கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றிலிருந்து சடலங்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதம் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் நான்கு பேர் உடல்களிலும் கயிறு கட்டி இருந்ததால் இது கொலையா? அல்லது தற்கொலையா? இல்லை வேற எது காரணமா? என காவல்துறையினர் கணவர் சரவணன் இடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
இதையும் படிங்க: #BREAKING திருச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு... மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனைவியைக் கொன்ற கணவனுக்கு வலைவீச்சு...!