தனக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவிக்க சீமானுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஐபிஎஸ் அதிகாரி வருண் குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாரும் சீமானும் தொடர்ந்து மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். வருண் குமார் தனது மனதில் இரண்டு கோடியே 10 லட்சம் மான நஷ்ட ஈடு சீமான் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம் வருண்குமார் குறித்து பேசுவதற்கு சீமானுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு தொடர்பாக சீமான் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிறைக்குச் சென்றவர் ஐபிஎஸ் அதிகாரி அருண்குமார் என்றும் தெரிவித்தார்.

நியாயமான விமர்சனங்களை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்க வருண் குமார் தகுதியற்றவர் என்றும் சீமான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டது. வருண் குமார் மனநல ஆலோசனை பெரும் நேரம் வந்துவிட்டதாகவும் சீமான் தரப்பில் குறிப்பிடப்பட்டது.
இதையும் படிங்க: வரலாற்று திரிபு திட்டமிட்ட சதி... அருண்மொழிச் சோழன் பிறந்தநாளே சதய விழா..! தமிழக அரசை வலியுறுத்திய சீமான்...!
இதனிடையே சீமானின் விமர்சனத்திற்கு டி.ஐ.ஜி வருண் குமார் தரப்பு வழக்கறிஞர் காட்டமாக பதில் அளித்தார். மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற வார்த்தையை பயன்படுத்தும் அருகதை சீமானுக்கு கிடையாது என்றும் தெரிவித்தார். நீதிமன்ற விசாரணையில் ஒரு அரசு உயர் அதிகாரி மீது சீமான் தரப்பில் முன்வைக்கப்பட்ட கடுமையான வார்த்தைகளே அவர் அரசியல் தலைவர் என்பதற்கு தகுதியில்லாதவர் என்பதை காட்டுவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாதகவிற்கு திருப்பம் தருமா திருச்சி?... பிப்ரவரி 7ம் தேதி அதிரடியாய் களமிறங்கும் சீமான்...!