வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ஆழ்ந்த் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகலில் மணிக்கு 10 கிலோமீட்டர் என்ற வேகத்தில் வட திசையில் நகர்ந்து தொடர்ந்து சென்னைக்கு தெற்கு மற்றும் தென்கிழக்கு 90 கிலோமீட்டர் தொலைவிலும், அதே போன்று புதுச்சேரிக்கு கிழக்கே தென்கிழக்கு 90 கிலோமீட்ட தொலைவிலும், கடலூருக்கு வடக்கே 110 கிலோமீட்ட தொலைவிலும், காரைக்காலுக்கும் வடகிழக்கு 180 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொள்ளும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் தற்போதைய சூழலில் காலை 5:30 மணி அளவில் சென்னைக்கு மிக அருகில், அதாவது 50 கிலோமீட்டர் என்ற அளவில்அதனுடைய நெருக்கம் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் இதனுடைய நெருக்கம் என்பது மேலும் கூடுதலாக வடக்கு திசை நோக்கி நகரும் பொழுது சென்னைக்கு அதிகபட்சமாக 40 கிலோமீட்டர் அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப்பகுதியானது நெருங்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதையும் படிங்க: மெரீனாவுக்கு போகாதீங்க..!! கொந்தளிக்கும் கடல் அலைகள்.. வீசும் சூறாவளிக்காற்று..!! மக்களுக்கு வார்னிங்..!!
மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இதுவரை நகர்ந்த வேகத்தை விட மேலும் மெதுவாக நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டினுடைய வட கடலோர பகுதிகளை ஒட்டியே தொடர்ந்து நகர்ந்து வருவதாகவும், இன்னும் 12 மணி நேரங்களில், அதாவது மாலை 5:30 மணிக்குள்ளாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுவிழந்து காற்ற தாழ்வு மண்டலமாக வலுகுறைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
மேலும் இதனுடைய மையப்பகுதி கடலோர பரப்புக்கு வடகடலோர பகுதியிலும் குறிப்பாக சென்னைக்கு அருகே இன்று நன்பகலில் வரும் பொழுது அதிகபட்சமாக 30 கிலோமீட்டர் என்ற தொலைவில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது நிலைக்கொள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னைக்கு பெரிய அளவிலான மழைக்கு வாய்ப்பில்லை என்றும், ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வலிமை குறைந்தாலும் இதனால் மழை மேகங்களை உருவாக்கக்கூடிய திறன் இருக்கும் என்பதால் கடலோர பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் கடல் சற்றே கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், சென்னையை ஒட்டி இருக்கக்கூடிய காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விடாது வெளுத்து வாங்கும் மழை... சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? - வெளியானது முக்கிய அறிவிப்பு...!