தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். பொதுத்துறை நிறுவனங்களின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளதால், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் இந்த போனஸ், அவர்களின் ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும்.

இதன் மூலம் தொழிலாளர்கள் பண்டிகைக் காலத்தில் கூடுதல் நிதி உதவியைப் பெற முடியும்.தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விரைவில் போனஸ் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு பண்டிகைக் காலத்தில் தொழிலாளர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்க உதவும் எனக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: வெடித்தது வெங்காய விவகாரம்..! கொந்தளித்த ரேஷன் கடை ஊழியர்கள்..! கடையடைப்பு போராட்டம்..!
இரண்டு லட்சத்து 60 ஆயிரம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர் பொருள் வாணிபக் கழக தற்காலிக ஊழியர்களுக்கு தீபாவளி போனதாக 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் 8,400 ரூபாய் போனசும், அதிகபட்சமாக 16 ஆயிரத்து 800 ரூபாய் போனசும் வழங்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: சூடு பிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்... பள்ளிகளுக்கு விடுமுறை... முக்கிய அறிவிப்பு..!