2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி உள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு ஆகியவை மும்முரமாக நடைபெற்ற முடிந்தன. எந்தெந்த தொகுதிகளில் யார் வேட்பாளர் என்பது அறிமுகப்படுத்தப்பட்டு தீவிரமான வாக்கு சேகரிப்பு நடந்து வருகிறது.
மீண்டும் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதற்காக திமுக தீவிரமாக களமாடி வருகிறது. இந்த நிலையில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு இயற்கை தாயகம் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நடைபெறவிருக்கும் 2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு, இயற்கைத் தாயகம் (தமிழ்நாடு) சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.இயற்கைத் தாயகம் (தமிழ்நாடு) சங்கத்தின் தலைவர் வை. இளங்கோவன் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை நேரில் சந்தித்து தி.மு.க. தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துக்காக கூறியது.
இதையும் படிங்க: உங்க விளக்கமே வினோதமா இருக்கு..! தொகுதி மறு வரையறை குறித்து ஆ.ராசா விளாசல்..!!
நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் பொதுத் தேர்தலில் முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருப்பதை வெளிப்படுத்தி உள்ளது. தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற அனைத்து தொகுதிகளிலும் இயற்கைத் தாயகம் (தமிழ்நாடு) சங்க நிர்வாகிகள் களப்பணியாற்றி பாடுபடுவார்கள் என உறுதி அளித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை சட்டத்தை மொத்தமா திரும்பப் பெறனும்..! முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்..!