தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் திமுக கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக, கடந்த 2021 தேர்தலில் பெற்ற வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ளவும், அதை மேலும் வலுப்படுத்தவும் திட்டமிட்டு நகர்ந்து வருகிறது.
இதற்காக கூட்டணி உத்தியை மிகவும் விரிவாக்கி, பல்வேறு கட்சிகளை இணைத்துக்கொண்டு பெரும் கூட்டணி அமைப்பதில் கவனம் செலுத்தியுள்ளது.கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் 13 கட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் இம்முறை அந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. பழைய கூட்டணி கட்சிகளுடன் இணைந்து, புதிதாக தேமுதிக, மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயகக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட பல கட்சிகள் திமுகவுடன் இணைந்துள்ளன.

இதனால் மொத்தம் 19 கட்சிகள் வரை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. இது தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய கூட்டணியாகக் கருதப்படுகிறது. இந்த விரிவான கூட்டணி மூலம் பல்வேறு சமூகங்கள், பிராந்தியங்கள் மற்றும் அரசியல் சக்திகளை ஒருங்கிணைத்து, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு எதிரான வலுவான முன்னணியை உருவாக்க திமுக முயல்கிறது.
இதையும் படிங்க: சூடு பிடிக்கும் அரசியல் களம்... SDPI கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டி...! வெளியான முக்கிய அறிவிப்பு..!!
இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 5 கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தவாக - 1, எஸ்டிபிஐ - 1, மஜக - 1, முக்குலத்தோர் புலிப்படை - 1, கொங்கு இளைஞர் பேரவை - 1 தொகுதி என ஒதுக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஆளுங்கட்சி நிர்வாகியின் மிருகத்தனம்... தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு..! Tvk கண்டனம்..!!