2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கட்சியை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. திமுக நிர்வாகிகளை நேரடியாக சந்திக்கும் முதலமைச்சர் திமுக தலைவருமான ஸ்டாலின், ஒன் டு ஒன் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிகை தயாரிக்கும் குழுவை திமுக அறிவித்துள்ளது.
நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பொதுநலச் சங்கங்கள், வணிக அமைப்புகள், இளைஞர்கள், விவசாய அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களின் நலன் விழையும் அமைப்புகளுடன் கலந்தாலோசித்திட திமுக தலைமைக் கழகத்தால் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி தலைமையில் இந்த குழு அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் முழு விபரம்:
- டி.கே.எஸ். இளங்கோவன் (செய்தித் தொடர்பு தலைவர்)
- கோவி.செழியன் (வர்த்தகர் அணி துணைத் தலைவர்)
- பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (சொத்து பாதுகாப்புக்குழுச் செயலாளர்)
- முனைவர் டி.ஆர்.பி. ராஜா, (தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர்)
- எம்.எம். அப்துல்லா, (அயலக அணிச் செயலாளர்)
- கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (செய்தித் தொடர்பு செயலாளர்)
- எழிலன் நாகநாதன் (மருத்துவ அணிச் செயலாளர்)
- கார்த்திகேய சிவசேனாபதி (சுற்றுச்சூழல் அணிச் செயலாளர்)
- தமிழரசி ரவிக்குமார் (மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர்)
- சந்தானம், இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (ஓய்வு)
- சுரேஷ் சம்பந்தம் (ஒருங்கிணைப்பாளர், [Convenor, Dream Tamilnadu])
உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: குனிஞ்சு கும்பிடு போட எதுக்கு அதிமுக பெயர்? நான் கேட்கலப்பா... அவங்கதான்..! முதல்வர் ஸ்டாலின் விளாசல்..!