திருச்சி உள்ளிட்ட இடங்களில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஏழு மணி நேரம் நீடித்த இந்த சோதனை பின்னர் நிறைவடைந்தது. சோதனை முடிந்ததும் திருச்சியில் பேசிய கே.என்.நேரு, எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை எனத் தெரிவித்தார்.தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர் கேட்டைத் திசைதிருப்பவே இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
“நிறைய இடங்களில் கொலை, கொள்ளை நடக்கிறது. அதனைத் திசைதிருப்பவே எனது வீட்டில் சோதனை நடந்துள்ளது. எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. லஞ்ச ஒழிப்புப் போலீசார் என்னிடம் விசாரணை நடத்தவில்லை” என அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதா ஆட்சியின் போது திமுகவினர் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளை எப்படி எதிர்கொண்டோமோ அதேபோலவே இந்தச் சோதனையையும் எதிர்கொள்வோம் என உறுதியாகக் கூறினார். தமிழக அரசியலில் தொடர்ந்து முக்கியப் பங்காற்றும் கே.என்.நேரு, இந்தச் சம்பவத்தை அரசியல் ரீதியான அழுத்தமாகவே பார்த்துள்ளார்.
இதையும் படிங்க: "தாமரை எங்கும் இருக்கும்"..! மக்கள் பணத்தை சுரண்டிய திமுக..!! அன்பில் மகேஷ் கைதுதான் சாட்சி..! தமிழிசை விமர்சனம்..!!
லஞ்ச ஒழிப்புத் துறையின் இந்த நடவடிக்கை மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்த விவாதங்களுக்கு மத்தியில் வந்துள்ளது. பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டப்படும் நிலையில், முன்னாள் அமைச்சரின் வீட்டில் நடந்த சோதனை அரசியல் விவாதங்களை மேலும் தூண்டியுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி என விமர்சித்தார்.
இதையும் படிங்க: நிர்மல் குமாருக்கு அமைச்சர் பதவி எதுக்கு.? தப்பித்த கைதிகள்..! விசாரணை ஆணையம் அமைக்க திமுக பரந்தாமன் கோரிக்கை.!!