கடந்த இருபது ஆண்டுகளாக இந்திய முஸ்லிம் லீக் கட்சி திமுக தலைமையிலான கூட்டணியில் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. 2011, 2016, 2021 சட்டமன்றத் தேர்தல்களிலும், 2009, 2014, 2019, 2024 லோக்சபா தேர்தல்களிலும் இணைந்து போட்டியிட்டுள்ளனர். பொதுவாக லீக்-க்கு சட்டமன்றத் தேர்தல்களில் 2 முதல் 3 தொகுதிகள் வரை ஒதுக்கப்படுவது வழக்கம்.
2021இல் கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. லோக்சபாவில் ராமநாதபுரம் போன்ற தொகுதி அடிக்கடி லீக்-க்கு கிடைப்பது வழக்கமாகிவிட்டது. இத்தொகுதிகளில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகம் இருப்பதால், லீக்-க்கு வலுவான அடித்தளம் உள்ளது.தற்போது, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக லீக் திமுகவிடம் 5 தொகுதிகளைக் கோரியுள்ளது. மேலும், கூட்டணியில் மொத்தம் 16 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொய்தீன் இதைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். திமுக ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்கள், சிறுபான்மை மக்களுக்கான அணுகுமுறை ஆகியவற்றைப் பாராட்டி, கூட்டணி வெற்றிக்காக முழு முயற்சி எடுப்போம் என லீக் தரப்பில் உறுதியளிக்கப்படுகிறது. கடந்த தேர்தல்களில் சில இடங்களில் தோல்வி இருந்தாலும், கூட்டணித் தர்மத்தை மதித்து லீக் தொடர்ந்து பயணிக்கிறது.
இதையும் படிங்க: ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரசுக்கு உரிமை இருக்கு… எங்களுக்கும் வேணும்தான்..! திருமா. பரபரப்பு பேட்டி..!
திமுகவுடன் கூட்டணி பங்கீடு குறித்து பேசுவதற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பேச்சுவார்த்தைக் குழுவை அமைத்துள்ளது. காதர் மொய்தீன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. திமுகவுடன் கூட்டணி பங்கீடு குறித்து பேச இருக்கும் நிலையில் 5 தொகுதிகளை கேட்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு இந்திய முஸ்லிம் லீக் போட்டியிட்ட மூன்றில் அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரசியலில் திருப்பம்: உதயசூரியனா..?? டார்ச்லைட்டா..!! ஸ்டாலினை சந்திக்கப்போகும் கமல்ஹாசன்..??