தமிழகத்தில் புதிய அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது. திமுகவுக்கு கூட்டணி பலம் உள்ளது அதுதான் வரும் தேர்தலில் வெற்றி பெறும் மக்களிடையே பரப்பப்பட்டு வந்த தகவல்களுக்கு மத்தியில் யாரும் நினைக்காத நேரத்தில் யாரும் கணக்கிடாத விதத்தில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணி கட்சிகள், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சி என தமிழக அரசியலில் உள்ள அனைத்து கட்சிகளுமே விதவிதமாக சர்வேக்களை எடுத்து வருகின்றன.
2026 தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு எதிராக இருக்கும் என்ற தகவல்கள் வெளியாக ஆரம்பித்திருப்பதால் தான் மு.க.ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விஷயத்தை பெரிதாக்கி உள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கிறது. இது வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எதிரொளிக்கும் என சர்வே ரிப்போர்ட் கூறியிருக்கிறது. போதை பொருள் புழக்கம், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு மந்தம், சட்டமொழுங்கு, ஊழல் இவை அனைத்திலும் திமுக அரசின் செயல்பாடுகள் மக்களை வெறுப்படையச் செய்திருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் கூட்டணிக்காக ஒருவரை தூக்கி பிடிப்பதற்காக மற்றவர்களை இகழ்வது. இதனால் பல சமூக பிரிவுகளில் ஏற்பட்ட நம்பிக்கை சிதைவு மேலும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராமங்களிலும், நகரங்களிலும் குறிப்பாக நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு வர்க்கங்களில் திமுகாவின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். திமுகவில் உட்கட்சி மோதல் அதிகமாக இருப்பதாகவும், தலைமை நிறுத்தும் வேட்பாளரை தோற்கடிக்க இன்னொரு டீம் தற்போதே ரெடியாகிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பாக சென்னை மண்டலத்தில் திமுகவின் நிலைமை மோசமாக இருப்பதாக அடுத்தடுத்து எல்லாவற்றையும் போட்டு போட்டு உடைத்திருக்கிறது பென் டீம்.
இதையும் படிங்க: மத்திய அரசை குறைச்சொல்லும் ஊழல் பெருச்சாளிகள்... திமுகவை விளாசிய நயினார்..!
எந்த கட்சியின் ஓட்டு விஜயின் கட்சிக்கு போகும் என்றும் ஒரு டிஸ்கஷனும் நடந்திருக்கிறது. அதில் எல்லா கட்சியோட ஓட்டும் தான் விஜய் கட்சிக்கு டைவர்ட் ஆகும். ஆனால் விடுதலை சிறுத்தைகள் மற்றும் திமுகாவின் ஓட்டுகள் அதிகமாக இருக்கும் என ரிப்போர்ட் அளித்திருக்கிறார்கள். இது எல்லாம் சேர்ந்து உதயநிதி முதல்வராகும் கனவு உடைந்து விடுமோ என்ற பயம் கோபாலபுரத்தை புரட்டி போட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எந்த ஷா வந்தால் என்ன? கருப்பு சிவப்பு படை பாடம் புகட்டும்... முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!