புதுக்கோட்டையில் திமுக முன்னாள் அமைச்சரும் திருமயம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான எஸ் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்: திடீரென்று சட்டமன்றம் அறிவித்த பிறகு, ஒரு வேட்பாளரை அங்கே அறிவிக்கிறார்கள். எந்த தொகுதியில்? அந்த வேட்பாளரை அறிவிக்கிறார்கள், சுகுமார்ன்னு அவர் பேரு. அவர் வந்து நாலு நாள் வேலை பார்த்ததுக்கு அப்புறம், இளையராஜா, அவர் போய் நான் வந்து அந்த தொகுதியில் நிக்கிறேன்னு ஊத்தங்கரையில சீட்டு கேட்டு வாங்கிட்டு வராரு. நிக்கிறாரு. அப்பவே அவங்க தெரிஞ்சுக்கலாம் நீங்க அவர் எப்படிப்பட்ட கேரக்டருக்கு சொந்தக்காரர்ன்னு. இப்ப அவர் வந்து சொல்றாராம், அதாவது திருநாவுக்கரசு என்கிறவர் என்கிட்ட தொடர்பு கொண்டார், அவர் தொடர்பு கொண்டு இந்த மாதிரி நீங்க உங்களோட தனியா பேசணும், வாங்கன்னாராம். எதுக்குன்னு இவர் கேட்டாராம், சபாநாயகர் மேல நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்போறோம், அதற்கு ஆதரவளிக்க வேண்டும்னு திருநாவுக்கரசு சொன்னாராம். எந்த அத்தாரிட்டியில் சொன்னாரோ, என்னங்கிறதெல்லாம் அவர் கேட்கல.
ஆனால், எந்த பணம் எதுவுமே அங்கே பேசப்படவில்லை, பரிமாறப்படவில்லை. ஆனால், அவர் கொடுத்த புகாரினுடைய அடிப்படையிலே திருநாவுக்கரசு மீது வழக்கு பதிவு செய்து, திருநாவுக்கரசு கொடுத்த திருநாவுக்கரசு தந்த வாக்குமூலம் என்கின்ற அடிப்படையில, ஏன்னா அவங்க எப்படி வாக்குமூலம் வாங்கி இருப்பாங்கன்னு தெரியும், மற்றொரு நபரை கைகாண்பித்து, அவரிடமிருந்து இன்றைக்கு செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான கார்த்தி போன்றவர்கள் மீது இன்றைக்கு தொடர்ந்து அந்த அம்பு பாய்ந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால், அதற்கு காரணம் முதலமைச்சர் விஜய் கரூருக்கு போவதற்கு முன்னால் செந்தில் பாலாஜியை கைது செய்துவிட்டு செல்ல வேண்டும் என்கின்ற அவர் போட்ட ஒரு சபதமாக இருக்கலாம் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
குதிரை பேரம் இங்கே எதுவுமே இருப்பதற்கான அடையாளமே கிடையாது. காவல்துறை அங்கே வழக்கு பதிவு செய்ததே தவறு. அதுவும் ஒரு புகாரின் அடிப்படையிலே விசாரணை கூட செய்யாமல் அவர்கள் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். எனவே, குதிரை பேர அரசியலுக்கு இன்றைக்கு தவெக ஆட்சிக்கு வந்தவுடனே நாலு எம்.எல்.ஏ ராஜினாமா பண்றாங்க. உடனே, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் ராஜினாமா கொடுக்கிறாங்க. அடுத்த நிமிஷம் தவெகவில் சேர்றாங்க. எனவே, அந்த 108 என்பதை 120க ஆக்க வேண்டும் என்கின்ற அந்த இலக்கோடு அவர்கள் குதிரை பேர அரசியலிலே ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பது இன்றைக்கு வெளிப்படையாக தெரியும். எனவே, ஒன்றிய அரசு இதற்குரிய விசாரணையை வைத்தாக வேண்டும்.
இதையும் படிங்க: விஜய் வாஷிங் பவுடரை போட்டு வெளுத்தால்... தவெகவுக்கு ஜம்ப் அடித்த விஜயபாஸ்கர்களை விளாசிய ரகுபதி...!
நாங்கள் பொறுப்பான எதிர்க்கட்சியாக இருக்கிறோம். எங்களுடைய தலைவர் குதிரை பேர அரசியலிலே வரவேண்டும் என்று நினைத்திருந்தால் 2017-லேயே வந்திருக்க முடியும். அன்றைக்கு எங்களிடத்திலே 109 எம்.எல்.ஏக்கள் இருந்தார்கள். ஆனால், குதிரை பேரம் கூடாது, நான் கொல்லைப் புற வழியாக வர விரும்பவில்லை, மக்களை சந்தித்துதான் நான் வருவேன் என்று சொன்ன தலைவர் எங்களுடைய தலைவர் மு.க.ஸ்டாலின். எனவே, கொல்லைப்புற அரசியல் என்பது அவருக்கு பிடிக்காது, நாங்க குதிரை பேரம் என்பது எங்களுக்கு பிடிக்காது. குதிரை பேர அரசியலில் ஈடுபட்டு ஆட்சிக்கு வர வேண்டும் என்று இருந்தால் அன்றைக்கே வந்திருக்க முடியும். எனவே, குதிரை பேரத்திற்கு எதிரானதுதான் திமுக. ஜனநாயகத்தைத்தான் நாங்கள் நம்புகிறோமே தவிர, பணநாயகத்தை நம்பவில்லை.

செந்தில் பாலாஜி மீது போடப்பட்ட வழக்குக்கும் சி விஜயபாஸ்கர் வழக்குக்கும் உள்ள வித்தியாசத்தை பார்க்க வேண்டும். செந்தில் பாலாஜி மீதி போடப்பட்ட வழக்கு சந்தேகத்தின் பெயரில் போடப்பட்ட வழக்குகள் தான். ஆனால் சி விஜயபாஸ்கர் மீது போடப்பட்ட வழக்குகள் சொத்து மதிப்பு வழக்கு குட்கா வழக்கு வருமானவரித்துறை வழக்கு இது எல்லாம் ஆதாரத்தின் அடிப்படையில் போடப்பட்ட வழக்குகள். இது போன்ற எந்த ஆதாரமும் செந்தில் பாலாஜி வழக்கில் கிடையாது. அவர் மீது போடப்பட்ட வழக்கு வாய்மொழி தகவல் மட்டுமே. அந்த வழக்கு சுத்தி சுத்தி வருகின்றது கடைசியில் நீதிமன்றத்தில் என்ன ஆகும் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் சி விஜயபாஸ்கர் மீது போடப்பட்டுள்ள வழக்கு நேரடி ஆவணங்களுடன் உள்ள குற்றச்சாட்டு. ஆர்கேநகர் பண பட்டுவாடா புகாரின் போது சோதனையின் போதே சி.விஜயபாஸ்கர் ஆதாரங்களை தூக்கி விட்டார். அப்போது அவர்கள் ஆட்சி தான் இருந்தது அந்த புகாரின் மீதும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. தற்போது ஊழல் குற்றச்சாட்டில் உள்ள சி விஜயபாஸ்கர் உள்ளிட்ட அவர்கள் தவெகவில் சேர்ந்தால் புனிதம் ஆகி விடுவார்களா?.
சட்டத்துறை அமைச்சர் ஆதரத்துடன் தான் குற்றச்சாட்டு வைப்பாரா? அவர் எந்தச் சட்டப் பாயிண்ட் வேண்டும் என்றாலும் சொல்லிக் கொண்டிருக்கலாம். நாங்களும் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் தான்.

நாங்கள் அன்றும் எந்த குதிரை பேரரத்திலும் ஈடுபடவில்லை இன்றும் எந்த குதிரை பேரரத்திலும் ஈடுபடவில்லை. இதை எங்கள் தலைவர் எந்த காலத்திலும் அனுமதிக்கவில்லை. அதிமுகவோடு கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு சிறு துளி கூட புள்ளி கூட எங்க தலைவர் மு க ஸ்டாலினுக்கு கிடையாது. நாங்கள் அன்று நினைத்திருந்தால் எங்களிடம் உள்ள அனைவரையும் செல்ல விட்டு இருக்க மாட்டோம். நாங்கள் அவர்களை அரவணைத்துக் கொண்டு சென்று இருக்க முடியும். ஆனால் ஒரு சிறு துளி கூட விருப்பமில்லாதவர் எங்கள் தலைவர்.
நிர்மல் குமார் சொல்வது பொய்யான குற்றச்சாட்டு அவர் உத்தமபுத்திரனா? சத்தியபுத்திரனா? அவர் சொல்வதுதான் உண்மையா வேதமா? நிர்மல் குமார் சொன்னால் சத்தியமா? திமுக அதிமுக சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சித்தது என்று அவர் திரும்பத் திரும்ப பொய்யே சொல்லி வருகிறார். அதற்கு ஆதாரம் இருந்தால் சொல்ல சொல்லுங்கள்.
முதலமைச்சருக்கு தோல்வியையும் கொடுப்பார்கள் பின்னர் வெற்றியையும் கொடுப்பார்கள். அது அந்தந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளில் நடக்கக்கூடிய ஒன்று. ஆனால் நாங்கள் ஐந்தாண்டு காலத்தில் மக்களுக்கு செய்திருக்கின்ற சேவைகளை போல இந்த ஐந்தாண்டு காலத்தில் அதில் பாதியை இந்த அரசு செய்து காட்டிவிட்டால் அடுத்த தேர்தலில் பார்க்கலாம். இதில் பாதி கூட அவர்களால் செய்ய முடியாது.
தமிழ்நாட்டில் ஆட்சி கவிழ்ந்து விடக்கூடாது ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது டெல்லி இங்கு ஆட்சிக்கு வந்து விடக்கூடாது அதற்காக எங்களிடம் இருக்கக்கூடியவர்களை நீங்கள் சென்று ஆதரவு தாருங்கள் என்று கேட்டுக் கொள்வதும் எங்கள் தலைவர் மு க ஸ்டாலின் எடுக்க முடிவு தான். அந்த கண்ணோட்டத்தில் தான் மு க ஸ்டாலின் நான் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று சொன்னதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அன்றே நாங்கள் தவெக ஆட்சி கவிழ்ந்துவிடக் கூடாது என்று முட்டுக் கொடுத்த நாங்கள் இன்று ஏன் அவர்கள் ஆட்சிக் கவிழ வேண்டும் என்று குதிரை பேரத்தில் ஈடுபட போகிறோம்? நிச்சயமாக மாட்டோம். நாங்கள் மக்களை சந்தித்துதான் ஆட்சிக்கு வருவோம். சந்திக்காமல் ஆட்சிக்கு வரமாட்டோம். மக்கள் வாக்களித்து தான் நாங்கள் ஆட்சி பீடத்தில் அமர்வோம் கொல்லை புறா வாசலில் சென்று அமர்வோம் என்ற எண்ணம் துளி கூட கிடையாது.
இதையும் படிங்க: "தமிழக பட்ஜெட்"..! தவெக அரசு மீது எகிறும் எதிர்ப்பார்ப்பு... முதல்வர் விஜய் ஆலோசனை..!