தமிழ்நாட்டின் பொருளாதாரம் குறித்து திமுக அரசு தொடர்ந்து முன்னிலைப் பேச்சுகளை முன்வைத்து வருவது, அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 2021ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, "திராவிட மாடல்" என்ற கோட்பாட்டின் கீழ் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துவதாக அக்கட்சி கூறி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டை 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரிலியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவது என்ற இலக்கை அறிவித்தது. 2024-25 நிதியாண்டில் மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி, தமிழ்நாட்டின் உண்மை வளர்ச்சி விகிதம் 11.19 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. இது இந்தியாவில் எந்த மாநிலமும் அடையாத இரட்டை இலக்க வளர்ச்சி ஆகும். கடந்த 14 ஆண்டுகளில் இதுபோன்ற வளர்ச்சி ஏற்பட்டது 2010-11ஆம் ஆண்டில் மட்டுமே.

அப்போதும் திமுக ஆட்சியில்தான். இந்தச் சாதனையை முதலமைச்சர் ஸ்டாலின் பெருமையுடன் சுட்டிக்காட்டி, திராவிட மாடல் அரசு மட்டுமே இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்துள்ளது என்று கூறி வருகிறார்.
இதையும் படிங்க: எந்த வாக்காளரையும் காரணம் இல்லாமல் நீக்க முடியாது... புரிஞ்சுக்கோங்க..! தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்...!
திராவிட மாடல் ஆட்சியில், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) 2021-22 நிதியாண்டில் ரூ.20.72 லட்சம் கோடி ஆக இருந்தது என்றும் அது 2024-25 நிதியாண்டில் ரூ.31.16 லட்சம் கோடி ஆக உயர்ந்துள்ளது எனவும் திமுக தெரிவித்துள்ளது. அதாவது 50% அபார வளர்ச்சியை 4 ஆண்டுகளில் எட்டியுள்ளது. தனிநபர் வருமானம் 2021-22 நிதியாண்டில் ரூ.2,42,339 ஆக இருந்தது, அது 2024-25 நிதியாண்டில் ரூ.3,61,619 ஆக உயர்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. அதாவது 49% அபார வளர்ச்சியை 4 ஆண்டுகளில் எட்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: அடிச்சு நகர்த்த போகுது... 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... உஷார் மக்களே...!