சென்னையில் நாய் உள்ளிட்ட செல்ல பிராணிகளுக்கு உரிமம் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நேற்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று முதல் உரிமம் இல்லாத நாய்களின் உரிமையாளர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது.
சென்னையில், செல்லப்பிராணிகள் வளர்ப்பு அதிகரித்து வருகிறது. அதேநேரம், அவற்றால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாக உள்ளன. குறிப்பாக, நாய்க்கு முறையாக தடுப்பூசி, ஓட்டுண்ணி நீக்காதாதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வளர்ப்பு நாய்கள் கடித்து காயப்படுத்துகின்றன. மேலும், நாய்களை வளர்க்க முடியாமல் பலர், அவற்றை சாலையில் திரிய விடுவதும் தொடர்கிறது. இவற்றை தவிர்க்க, அனைத்து செல்லப் பிராணிகளையும் பதிவு செய்வதுகட்டாயம் என, மாநகராட்சி தெரிவித்தது. அவ்வாறு பதிவு உரிமம் பெறும் நாய்களுக்கு அக்டோபர் 8ம் தேதி முதல், 'மைக்ரோ சிப்' பொருத்தும் பணி நடந்து வருகிறது.
நேற்று கடைசி நாள் என்பதால், சென்னையில் அமைக்கப்பட்டிருந்த ஏழு சிகிச்சை மையங்கள் உட்பட எட்டு சிறப்பு முகாம்களில் ஒட்டுமொத்தமாக 15 இடங்களில் இன்று காலை 8 மணி முதலே செல்ல பிராணிகளுடைய உரிமையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உரிமம் பெற்றனர். சென்னை மாநகராட்சியில் சுமார் 98,523 செல்லப் பிராணிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், 56,378 செல்லப் பிராணிகளுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டு, மைக்ரோசிப்கள் பொருத்தப்பட்டன.
இதையும் படிங்க: #BREAKING செல்லப்பிராணிகள் வளர்ப்போர் கவனத்திற்கு... ஐகோர்ட்டில் சென்னை மாநகராட்சி முக்கிய தகவல்...!
செல்ல பிராணிகளால் தொடர்ச்சியாக பல்வேறு சவால்களை சந்தித்த சென்னை மாநகராட்சி அதற்கான சிறப்பு முகாம்களை நடத்தியது. குறிப்பாக மைக்ரோ சிப் பொறுத்துதல், லைசன்ஸ் வழங்குதல், தடுப்பூசி போடுவது என தொடர்ச்சியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. நேற்று ஒரு நாள் மட்டும் 2,930 செல்ல பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது. உரிமம் பெறுவதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், உரிமம் பெறாதவர்களுக்கு இன்று முதல் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக பூங்கா, சாலை உளிட்ட பொது இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் அதன் பிறகு வீடு வீடாக சென்று ஆய்வு செய்யப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அதிமுக ஒரு ஆலமரம் ; செங்கோட்டையன் சின்ன குருவி... வெளுத்து வாங்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்...!