தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உதகை குன்னூர் கோத்தகிரி போன்ற பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால் மலை ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவை நேற்றும், இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போல் குன்னூர் உதகை இடையே மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் உதகை- குன்னூர் இடையே மலை ரயில் சேவையும் இரு தினங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஈரப்பதம் அதிகரித்து குன்னூர் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குன்னூர் பேரக்ஸ் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதே போல் குன்னூர் உதகை இடையே இரண்டாவது மாற்று பாதையில் கொந்தளா பகுதிகளில் பாறைகள் சரிந்து சாலையில் விழுவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
இதனிடையே, உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரம் , பைன் மரக்காடுகள் , 8th மைல், Tree Park, அவலாஞ்சி மற்றும் கேர்ன்ஹில் சூல் சுற்றுலா மையங்கள் போன்ற சுற்றுலா தளங்கள் இன்று ஒரு நாள் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது .
இதையும் படிங்க: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்... படகுகள் தயார்... உஷார் மக்களே...!
இந்த சுற்றுலா தலங்களில் அதிகமான மரங்கள் இருப்பதாலும் இந்த பகுதிகளுக்கு செல்லக்கூடிய சாலைகள் அடர்ந்த வனப் பகுதிகள் என்பதால் மரங்கள் விழும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ள வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த 5 சுற்றுலா தலங்களும் இன்று ஒரு நாள் தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் எனவும் மனதுறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக உளிகள் பகுதியில் இரண்டு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #BREAKING விழுப்புரத்தில் பேரதிர்ச்சி... தலைக்குப்புற கவிழ்ந்த அரசு பேருந்து... 30 பேரின் நிலை என்ன?