எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி பணியாளர் சித்ரா என்பவரை மன உளைச்சல் ஏற்படும் வகையில் தரக்குறைவான வார்த்தைகளால் கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் காந்திராஜன் திட்டியதால் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு.
தேர்தல் ஆணையம் தேர்தல் வாக்காளர் சிறப்பு சீர்திருத்தம் என்ற பெயரில் தற்போது அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய படிவங்கள் வழங்கி வருகின்றனர்.
இந்த பணியில் அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் கும்பகோணம் அருகில் உள்ள கொற்கை கிராமத்தைச் சேர்ந்த சித்ரா வயது 59 அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருகிறார் .
இதையும் படிங்க: விறுவிறு SIR... ஆறு கோடி பேருக்கு விண்ணப்பம்... தேர்தல் ஆணையம் முக்கிய தகவல்...!
நேற்றைய தினம் தேர்தல் ஆணையம் வழங்கி உள்ள ஆப் அப்டேட் ஆனபடியால் நேற்று முழுமையாக பணியாற்ற முடியவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு தொலைபேசியில் அங்கன்வாடி பணியாளர் சித்ரா என்பவரை கும்பகோணம் நகராட்சி ஆணையர் இன்று இரவுக்குள் 200 படிவங்களை பூர்த்தி செய்து அப்லோடு செய்ய வேண்டும் என பணித்துள்ளார். மேலும் தர குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அங்கன்வாடி பணியாளர் சித்ரா இன்று காலை அளவுக்கு அதிகமான மாத்திரைகளை விழுங்கியதால் மயக்க முற்றார்.
இவரது மையம் உள்ள எலுமிச்சங்காய் பாளையம் என்ற இடத்திலிருந்து மாத்திரை விழுங்கிய சித்ராவை கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்த்தனர் . இங்கு இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அங்கன்வாடி பணியாளரை மன உளைச்சல் ஏற்படும் வகையில் பேசிய கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் காந்தி ராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ஏனைய அங்கன்வாடி பணியாளர்கள் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் முன் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: வடமாநில தொழிலாளர்களுக்கு வாக்குரிமை... பாஜகவின் சதித்திட்டம்... அம்பலப்படுத்தும் செல்வப் பெருந்தகை...!