வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இதனை உறுதிப்படுத்தினார். பீகாரைத் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

பீகார் வாக்காளர் நீக்கத்திற்கு எதிராக இதுவரை எந்த மேல்முறையீடுகளும் இல்லை என ஞானேஷ்குமார் விளக்கம் அளித்தார்.  சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை திமுக நாடியுள்ளது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: SIR ஜனநாயக படுகொலை... பாத்துட்டு சும்மா இருக்க முடியாது...! முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்..!
வாக்காளர் திருத்தப் பணிகள் எதிர்பார்ப்பதை விட சிறப்பாக மேற்கொள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. மேலும் சென்னை டி.நகர், தாம்பரம் தொகுதி வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள் உள்ளது என்றும் கூறியுள்ளது.
இதையும் படிங்க: SIR ஐ பயன்படுத்தி பாஜகவுக்கு எதிரான வாக்குகளை நீக்க முயற்சி... ஓபனாக பேசிய துணை முதல்வர்...!