தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்குத் தொடர்பாக டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீடு உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மணப்பாக்கம் சி.ஆர். புரத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினருடன் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இதேபோல், சூளைமேடு கல்யாணபுரத்தில் உள்ள எஸ்.என்.ஜே. மதுபான நிறுவன அலுவலகத்திலும், சென்னையில் தேனாம்பேட்டை, தி.நகர், அண்ணா சாலை, பெசன்ட் நகர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் மற்றும் அவரது மனைவியை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் 5 மணி நேரமாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் 2வது நாளாக தொடரும் சோதனை... சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!

இந்த நிலையில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: அதிமுக மாஜி. அமைச்சர் வீட்டில் ரெய்டு.. காலை முதலே லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி..!