காவிாியின் குறுக்கே அணை கட்ட கர்நாடகா பிற மாநிலங்களின் ஒப்புதலை பெற தேவையில்லை என்ற மத்திய அமைச்சாின் கருத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய இணை அமைச்சாின் எழுத்துப்பூா்வ பதில் தமிழக மக்களிடையே மிகப்பொிய அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழு செயலாக்கத் திட்டத்தை 1.6.2018 அன்று மத்திய அரசிதழில் வெளியிட்டு, அதன்படி தமிழ் நாட்டிற்குரிய பங்கு நீர் பெறப்பட்டு வந்தது என்றும் இந்த ஆண்டு கர்நாடக அரசு காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய காலத்தில் வழங்கத் தவறியதால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது பல மாவட்டங்களில் குடிநீருக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார். பன்மாநில நதிகள் தேசிய சொத்து. எந்த ஒரு மாநிலமும் தனி உரிமை கோர இயலாது என்று 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். அனைத்து மாநிலங்களின் வாதங்களை முழுமையாகக் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், தனது தீர்ப்பில், ஆற்றின் மேல்புறத்தில் அமைந்துள்ள எந்த ஒரு மாநிலமும், ஆற்றின் கீழ்ப்புறத்தில் உள்ள மாநிலங்களுக்கு திட்டமிடப்பட்டபடி நீர் விநியோகம் செய்யப்படுவதை பாதிக்கும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது எனத் தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் பழனிசாமி... கூட்டத்தில் பங்கேற்காத நிர்வாகிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-ஆவது கூட்டத்தின் விவாதப் பொருளில் மேகதாது அணை விவகாரம் சேர்க்கப்பட்டதை மிகக் கடுமையாகக் கண்டித்தேன் என கூறிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தை வஞ்சிக்க முயற்சிக்கும் எந்தப் பிரச்சனையையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்றார்.
இதையும் படிங்க: செங்கோட்டையன் வச்ச குறி... இபிஎஸ் உறவினர் ஆலைக்கு சிக்கல்... அதிகாரிகளோட களமிறங்கிய அமைச்சர்...!