அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நேற்று உற்சாகமாக கொண்டாடினர். 71 வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை பகிர்ந்தனர். இந்நிலையில் 71 வயதில் அடியெடுத்து வைத்த கையோடு எடப்பாடி பழனிசாமி முன்பு இருக்கும் 5 சவால்கள் என்னென்ன என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

வரப்போகும் தேர்தலுக்கு அதிமுக தயாராகி வருகிறது. அத்துடன் தன்னுடைய கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியிலும் இறங்கி வருகிறது. மேலும், வரப்போகும் 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க ஒட்டுமொத்த அதிமுகவினரும் அதிரடி நடவடிக்கைகளை கையில் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், அதிமுக - பாஜக கூட்டணியை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சேர்க்க வேண்டிய முக்கியமான வேலை எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது. ஏனெனில் பாஜகவுடன் கூட்டணியே வைக்கமாட்டோம் என அடித்துக்கூறிய எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்ததோடு, ஒரு வார்த்தைக்கூட பேசாமல் பாஜக - அதிமுக கூட்டணியை ஓகே செய்தது வரை நிறைய மர்மங்கள் நீடிக்கிறது.

இதனால் அதிமுகவில் பலத்த உட்கட்சி பூசல் கிளப்பியிருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்களைக் கூப்பிட்டு எடப்பாடி பழனிசாமி கூட்டணி குறித்து விமர்சிக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தாலும், களத்தில் இறங்கி வேலை செய்யக்கூடிய தொண்டர்கள் இன்னம் அப்செட்டில் தான் இருக்கிறார்களாம். அவர்களை சமாதானப்படுத்த வேண்டிய முக்கியமான பணி அதிமுகவிற்கு இருக்கிறது.

இதையும் படிங்க: 'இபிஎஸ் பிறந்தநாளுக்காக இந்தியா - பாக்., போரையே தள்ளி வைச்சிட்டாங்க..! வைகை செல்வன் அக்கப்போர்..!
அடுத்ததாக தென் மாவட்டங்களில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய வேலையை எடப்பாடி பழனிசாமி வேக, வேகமாக செய்ய வேண்டும். கடந்த மக்களவை தொகுதி தேர்தலில் தேனி, மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிமுக பலத்த அடி வாங்கியிருந்தது. இதற்கு முக்கிய காரணம் டிடிவி தினகரன் எனக்கூறப்பட்டது. தற்போது அவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வசிப்பதால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு 2026 தேர்தலுக்குள் அதிமுக தென்மாவட்டங்களில் தனது வேரை ஆழமாக ஊன்ற வேண்டும் இதற்காக சில மாவட்ட செயலாளர்களை மாற்றவும், தூக்கவும் வேண்டிய பணிகளை எடப்பாடி பழனிசாமி செய்தாக வேண்டும் எனக்கூறப்படுகிறது.

மூன்றாவதாக 234 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய வேண்டும். நேற்று கட்சி ஆரம்பித்த விஜய் கூட ரோடு ஷோவில் கலக்கி வருகிறார். ஆளும் கட்சி என்பதால் ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் கூட்டம் கூடிவிடுகிறது. இப்படி இருக்க அதிமுக சைலண்ட்டாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனவே சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக எடப்பாடியார் ஒரு சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் பரிந்துரைக்கின்றனர்.

நான்காவது ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களையும் ஆளும் திமுக அரசை கண்டித்து தொடர்ந்து ஆர்பாட்டம் போராட்டங்களை பிரம்மாண்டமாக முன்னெடுக்கணும். சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் வெறும் அறிக்கையை மட்டும் விடாமல் அடுத்தடுத்து போராட்டங்களை நடத்தினால் தான் மக்கள் கவனம் அதிமுக பக்கம் திரும்பும். அதுக்கப்புறம் வலிமையான கூட்டணியை அமைக்கணும். தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்துள்ளது. இந்த கூட்டணியில் இன்னம் விஜயின் தவெக, அன்புமணியின் பாமக, பிரேமலதா விஜயகாந்தின் தேமுதிகவையும் இணைத்துவிட்டால் சட்டமன்ற தேர்தலில் ஒருத்தரும் அதிமுகவை அசைக்க முடியாது என்கின்றனர் விமர்சகர்கள்.
இதையும் படிங்க: இந்த அவமானம் தேவையா?... எடப்பாடியை அசிங்கப்படுத்திய பெண் மாவட்ட செயலாளர்...!