தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் திராவிட மாடல் அரசு என்ற கருத்தாக்கம், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் மையக் கொள்கையாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிறுத்தி வருகிறார்.
இது சமூகநீதி, சமத்துவம், மொழிப்பற்று, மாநில உரிமைகள் மற்றும் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டது என திமுக வலியுறுத்தினாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி இதனை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அவரது விமர்சனங்கள் ஆட்சி நிர்வாகம், ஊழல் குற்றச்சாட்டுகள், மக்கள் நலத் திட்டங்களின் தோல்வி மற்றும் திமுகவின் கொள்கை அணுகுமுறைகளை மையப்படுத்தியவையாக உள்ளன. எடப்பாடி பழனிசாமி, திராவிட மாடல் அரசு என்பது மக்கள் நலனை விட ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
இதையும் படிங்க: “திமுகவை மக்கள் நிச்சயம் வீட்டிற்கு அனுப்புவார்கள்“ - அதிமுக மாஜி அமைச்சர் வேலுமணி உறுதி...!
இந்த நிலையில், திமுக ஆட்சியில் கடன் சுமை அதிகரித்து விட்டதாக குற்றம் சாட்டினார். பெரிய அளவில் எந்த திட்டத்தையும் திமுக செயல் படுத்தவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

ஆட்சி அதிகாரம் பெரிதல்ல என்றும் மக்களாட்சி வழங்குவதே அதிமுகவின் நோக்கம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். தனிநபர் வருமானத்தில் தமிழகத்தின் சாதனை என்பது அதிமுக ஆட்சியின் தொடர்ச்சியே தவிர திமுக அரசின் சாதனை அல்ல என விளக்கம் அளித்தார்.
நெருக்கடியான காலகட்டத்தில் கூட சிறந்த நிதி நிர்வாகத்தை அதிமுக வழங்கியதாகவும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் போட்ட விதைதான் இன்றைய தமிழகத்தின் வளர்ச்சிக்கு காரணம் என்றும் தெரிவித்தார். 10 மாவட்டங்களில் 46 சட்டமன்ற தொகுதிகளில் 18.5 லட்சம் மக்களை நேரடியாக தான் சந்தித்துள்ளதாகவும் இபிஎஸ் கூறினார்.
இதையும் படிங்க: “பிஸ்கட்டை கவ்விக் கொண்டு ஓடும் நாய் போல்...” - அன்வர் ராஜா, ரகுபதியை மறைமுகமாக சாடிய எடப்பாடி...!