திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மடத்துக்குளம் பகுதியில் எடப்பாடி பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் பெண்மணி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பிரச்சார பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த பிரச்சாரத்தின் போது கள்ளுக்கடை பகுதியைச் சேர்ந்த பெருமாள்(60) என்ற பெண்மணி கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்தார்.
எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டிருக்கும்போது அந்த பெண்மணி மயக்கம் அடைந்திருந்தாலும் அவர் பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து மக்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தார். உடனடியாக கூட்டத்தில் இருந்தவர்கள் அந்த பெண்மணியை துண்டுகட்டாக தூக்கி வந்து அருகில் இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதையும் படிங்க: செங்கோட்டையனுக்கு எதுக்கு இந்த வேலை? அமித்ஷா தான் முடிவெடுப்பாரா! விளாசிய ஆ.ராசா…
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த பிரச்சாரத்தின் போது எம்ஜிஆர் ஜெயலலிதா உருவத்தில் பெரிய அளவில் கட்அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தது. ஆபத்தை உணராமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்தக் கட்அவுட் மீது ஏறி நின்று எடப்பாடியின் பேச்சை கேட்டு வருகின்றனர். ஆனால் பொது மக்களின் உயிரை மதிக்காமல் அவர்களை கீழே இறங்க கூட சொல்லாமல் தொடர்ந்து பேச்சை தொடர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: பரபரக்கும் கொங்குமண்டலம்.. இபிஎஸுக்கு புது சிக்கல்... அதிமுகவினர் மீது அடுத்தடுத்து பாய்ந்தது வழக்கு...!