சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற ஒரு முக்கிய நிகழ்வில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினர் அனைவரும் அதிமுகவில் இணைந்தனர். இந்த இணைப்பு விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில் திமுக ஆட்சியின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார்.

எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “சட்டசபையில் மக்களின் பிரச்சனைகளை எழுப்பினால் அதற்கு சரியான பதில் இல்லை. காலையைப் பார்த்தால் தான் சரியான பாதையில் பயணிக்க முடியும். அரசியலை அரசியல் ரீதியாகப் பேச வேண்டும் என்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை விமர்சித்த வகையில் கூறிய ‘மேலே பார்க்காமல் கால்களை மட்டும் பார்த்தால் சூரியன் எப்படித் தெரியும்?’ என்ற கருத்துக்கு எதிர்வினையாகவும் அவர் பதிலளித்தார்.
இதையும் படிங்க: “எடப்பாடியாரை முதலமைச்சராக ஏற்போரை இருகரம் கூப்பி வரவேற்போம்!” - ஆர்.பி. உதயகுமார் அதிரடி!
திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், “விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளது. மக்களுக்கு கிடைத்தது கடனாளி என்ற பட்டம் மட்டுமே. திமுக ஆட்சியின் அவலங்களை நாங்கள் சுட்டிக்காட்டினால், அதற்கு பதில் அளிக்காமல் அவதூறு பரப்புவதா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாகவும் விமர்சித்தார். “நான்கில் ஒரு பங்கு வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதிகளை மறந்துவிடுகிறார்கள். மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டத்தை புதிய பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளனர். அரசு ஊழியர்களையே ஏமாற்றிய கட்சி திமுக” என்று கூறினார்.
100 நாள் வேலைத் திட்டம் குறித்தும் திமுக தவறான தகவல்களைப் பரப்புவதாகக் குற்றம்சாட்டினார். “100 நாள் வேலைத் திட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்று தவறாகப் பரப்புகிறார்கள். உண்மையில் அதை 125 நாட்களாக அதிகரித்துள்ளனர்” என்று விளக்கினார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என்ற உறுதிமொழியையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

“எல்லா துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது” என்று கடுமையாக விமர்சித்தார்.இ ந்த நிகழ்வு அதிமுகவின் வளர்ச்சியை வெளிப்படுத்துவதாகவும், திமுக ஆட்சியின் மீதான அதிருப்தியை பிரதிபலிப்பதாகவும் கட்சியினர் கருதுகின்றனர். ஓமலூர் பகுதியில் நடைபெற்ற இந்த இணைப்பு விழா, அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: “விடியா ஆட்சி - உங்கள் வீட்டு Bill-லே சாட்சி” - அதிமுகவின் புதிய பிரச்சாரம் தொடக்கம்!