ஜூலை 7 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தை நடத்தி வருகிறார். இந்த சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளில் இருந்து இந்த சுற்றுப்பயணம் தொடங்கியது. ஜூலை 21 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் கட்டம் முடிவடையும் என கூறப்பட்டுள்ளது.
இதில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மற்றும் பேராவூரணி தொகுதிகள் அடங்குகின்றன. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என முதலமைச்சர் கூறுவது பொய் என்றும் 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் கனவு வேண்டுமானால் காணலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை குறித்து சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பியதாகவும், அதிமுக கொடுத்து அழுத்தத்தின் காரணமாகவே ஆயிரம் போதும் மகளிர் உரிமை தொகை கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை என்பது என்ன முதலமைச்சர் பணமா என்று கேள்வி எழுப்பினார். 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என கூறினீர்களே? செய்தீர்களா என்று கேள்வி எழுப்பினார்.
100 நாள் வேலை திட்டம் 50 நாள் திட்டமாக குறைந்துவிட்டதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்தார். தேர்தல் வாக்குறுதியான மகளிர் உரிமைத் தொகையை திமுக அரசு 28 மாதங்கள் கழித்து தான் கொடுத்ததாகவும் கூறினார். கண்ணால் பார்க்க முடியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக என்றும் மக்களை ஏமாற்றுகிற அரச திமுக அரச என குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை... மக்கள் விரோத ஆட்சி... திமுகவை பந்தாடிய இபிஎஸ்..!
இதையும் படிங்க: அதிமுகவை கிள்ளுகீரையாக நினைக்கிறார் அமித்ஷா! திருமா டைரக்ட் அட்டாக்..!