மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக மற்றும் பாஜக இடையே மீண்டும் கூட்டணி உறுதியாகியுள்ளதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு, 2023-இல் கூட்டணி முறிவுக்கு வந்த பின்னர், தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கூட்டணி குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அவரது கருத்துகள், இந்தக் கூட்டணியின் அரசியல் நோக்கங்கள், அதிமுகவின் நிலைப்பாடு, மற்றும் தமிழக மக்களின் மனநிலை ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றன.
இதனிடையே, அதிமுக-பாஜக கூட்டணி ஒரு இயல்பான அரசியல் ஒத்துழைப்பு அல்ல, மாறாக பாஜகவின் அழுத்தம் மற்றும் நெருக்கடியின் விளைவாக உருவானது என்று திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்-உம் அதிமுகவை மற்ற கட்சிகளுடன், குறிப்பாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க விடாமல் தடுத்து, இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.,இது, அதிமுகவின் தன்னிச்சையான முடிவு இல்லை, மாறாக பாஜகவின் திட்டமிட்ட அரசியல் உத்தியின் பகுதி என்று அவர் விமர்சித்துள்ளார்.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுக பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணி என்ற தெரிவித்தார். கொள்கை அளவில் மட்டுமல்ல செயலளவிலும் இணைந்து செயல்பட முடியாமல் அவர்கள் இருப்பதாக விமர்சித்தார். அவர்களுக்குள் இடைவெளி இருப்பதாகவும் வெளியில் இருக்கும் கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வரவே கூட்டணி ஆட்சி என்று அமைத்து பேசி வருவதாகவும் தெரிவித்தார்.
கூட்டணி ஆட்சி என்பதை அதிமுக தான் அறிவிக்க வேண்டும் என்று கூறிய திருமாவளவன், அதிமுக தலைவர்கள் ஒன்று கூடி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை என்று தெரிவித்தார். அமித் ஷா இவ்வாறு பேசி வருவது அதிமுகவை கிள்ளுக்கீரையாக நினைப்பதாகவே தெரிகிறது என்றார்.
இதையும் படிங்க: இந்த முறை BJP தான்... நெல்லையில் தரமான சம்பவம் இருக்கு! நயினார் அறிவிப்பு...
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கும் பாஜக.. அந்த எண்ணம் எடுபடாது.. அன்வர் ராஜா பரபரப்பு பேச்சு..!