நாமக்கல் மண்டலத்தில் சுமார் ஆயிரத்து மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள் தோறும் 5 கோடிக்கு அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. சந்தை நிலவரத்தை பொறுத்து நாள் தோறும் முட்டை விலை நிர்ணயம் செய்து நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்து வருகிறது.

முட்டை விலை நிர்ணயம் செய்வதில் பல்வேறு குளறுபடி உள்ளதாகவும் சிறு பண்ணையாளர்களை கலந்து ஆலோசிப்பது இல்லை. பெரிய பண்ணையாளர்கள் கருத்துகளை மட்டுமே கலந்து ஆலோசித்து முட்டை விலையை (NECC) தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்து வருவதாக குற்றம்சாட்டி, நாமக்கல் பகுதியை சேர்ந்த சிறு கோழிப் பண்ணையாளர்கள் சுமார் 50 க்கு மேற்பட்டோர் இன்று (நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: நாளைக்கு முட்டை வாங்கப்போறீங்களா?... கடைக்கு முன்னாடி போய் டென்ஷன் ஆகிடாதீங்க...!
சிறு கோழிப் பண்ணையாளர்கள் நலன் கருதி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் 1,100 க்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 5.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தினசரி 30 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாளைக்கு முட்டை வாங்கப்போறீங்களா?... கடைக்கு முன்னாடி போய் டென்ஷன் ஆகிடாதீங்க...!