ஈரான் இஸ்ரேல் போர் காரணமாக இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தம் எதிரொலி. நாமக்கல் பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் சுமார் 20 கோடிக்கு அதிகமான முட்டைகள் தேக்கம்.
நாமக்கல் மண்டலத்ததில், சுமார் 1,100 க்கு மேற்பட்ட முட்டைக் கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் சுமார் 10 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. நாள்தோறும் சுமார் 70 லட்சம் முட்டைகள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் நாமக்கல் பகுதியில் இருந்து மட்டுமே முட்டை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஓமன், பஹ்ரைன், மஸ்கட் போன்ற ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஒரு சில ஆப்ரிக்க நாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. ஈரான் இஸ்ரேல் போர் காரணமாக இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி முற்றிலும் தடைப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: தேர்தலில் மநீம போட்டியில்லை! கமல் அறிவிப்பு!
நாமக்கல் லில் இருந்து வளைகுடா நாடுகளான ஈரான், ஈராக், துபாய், கத்தார், ஓமன், பஹ்ரைன் சார்ஜா ஆகிய நாடுகளுக்கு முட்டைகள் ஏற்றுமதி ஆகி வந்தது. இந்த நிலையில் தற்போது
ஈரான் இஸ்ரேல் போர் காரணமாக இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு முட்டை ஏற்றுமதி முற்றிலும் தடைப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ள தால் நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகளில் தற்போது சுமார் 20 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை அதிரடியாக 20 காசுகள் சரிந்துள்ளது. முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.4.25 காசுகளில் இருந்து 20 காசுகள் குறைத்து ரூ.4.05 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இன்று (24-3-2026) மாலை அறிவித்துள்ளது. இந்த விலை நாளை (24-3-2026) காலை முதல் அமலுக்கு வருகிறது.
இதையும் படிங்க: மார்ச் 27க்குள் இது நடக்காவிட்டால் தமிழகமே ஸ்தம்பிக்கும்... தேர்தல் நேரத்தில் விக்கிரமராஜா விபரீத எச்சரிக்கை...!