வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடைபெற்றது. பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இடையே வாக்காளர் திருத்த பணிகள் நடந்து முடிந்தது. வாக்காளர் திருத்தம் படிவங்களை கொடுக்க மூன்று நாட்கள் கூடுதல் அவகாசமும் வழங்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நிறைவடைந்தது.
இதையும் படிங்க: SIRக்கு பின்.. மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் OUT..!! தேர்தல் ஆணையம் அதிரடி..!!
இந்த நிலையில் தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை என்ற தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. வாக்காளர் பற்றிய விவரங்கள் இணையதளத்திலும் பதிவேற்றப்படும் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் இன்று முதல் படிவம் 6 ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள பதிவுகள் குறித்து ஜனவரி 18ஆம் தேதி வரை ஆட்சேபங்கள் தெரிவிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... விறுவிறு SIR...! புதுவையில் 85 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம்... ஆட்சியர் அறிவிப்பு...!