வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர்.
அது மட்டுமல்லாது வாக்குத்திருட்டு நடைபெற்று இருப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு பேசி வருகிறார். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடைபெற்றது.

இந்த நிலையில், புதுச்சேரியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு பிறகான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 10.05% அளவில் 85 ஆயிரத்து 531 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார். இறந்தவர்கள் 14, 151 பேர் என்றும் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் 45 ஆயிரத்து 312 பேர் என்றும் ஆட்சியர் தெரிவித்தார். ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 60 ஆயிரத்து 396 பேரும், பெண் வாக்காளர்கள் 4 லட்சத்து 5 ஆயிரத்து 728 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 120 பெரும் இருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழகத்திலும் வெற்றி பெற பாஜக சதி... திருமா ஓபன் டாக்...!
இந்த பட்டியலில் இடம்பெறாதவர்களுக்கு போதுமான கால அவகாசம் இருப்பதாகவும் ஜனவரி 15ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் உரிமை கோருதல் மேற்கொள்ளலாம் என்றும் உரிமை கோருதல் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் மீண்டும் இடம் பெறலாம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விறுவிறு SIR பணிகள்... மேலும் அவகாசம் நீட்டிப்பு...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு...!