புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகம் (தவெக) சட்டமன்றத் தேர்தலில் எதிர்கொள்ள இருக்கும் சூழல் மிகுந்த எதிர்பார்ப்பையும், அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விஜய் தலைமையிலான இந்தக் கட்சி, தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் தனது அரசியல் விரிவாக்கத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது.
2026 ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில், 30 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் விஜய், கடந்த 2025 டிசம்பர் மாதம் புதுச்சேரியில் நடத்திய முதல் பொதுக்கூட்டத்தில், புதுச்சேரி மக்களுக்கு குரல் கொடுப்பது, மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்துவது உள்ளிட்ட வாக்குறுதிகளை முன்வைத்தார்.

மத்திய அரசு புதுச்சேரியை புறக்கணிப்பதாகவும், உள்ளூர் நிர்வாகத்துக்கு உரிய மதிப்பு அளிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். இதன்மூலம், புதுச்சேரி மக்களுடன் உணர்வுபூர்வமான தொடர்பை ஏற்படுத்த முயன்றார். புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகத்துடன் நேயம் மக்கள் கழகம் கூட்டணி அமைத்துள்ளது.
இதையும் படிங்க: அதிகார மிரட்டலுக்கு இறையாகிறதா ஏழைகள் உயிர்? அழுகிய நிலையில் சடலம்..! தவெக சரமாரி கேள்வி..!!
நேயம் மக்கள் கழகத்திற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணியில் உருளையன்பேட்டை, தட்டாஞ்சாவடி தொகுதிகளில் நேயம் மக்கள் கழகம் போட்டியிடும் என தமிழக வெற்றி கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நேயம் மக்கள் கழகத் தலைவரும் சுயேட்சை எம்எல்ஏ வுமான குப்புசாமி கூட்டணி அமைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் விதிமீறல்... தவெக மாவட்டச் செயலாளர் மீது பாய்ந்த வழக்கு..! அதிரடி நடவடிக்கை..!!