கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் ஒற்றைக் காட்டு யானை சுற்றித் திரிவதால் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத்துறை தடைவிதித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் நகர் பகுதி மற்றும் இன்றி கொடைக்கானலில் இருந்து தொலைதூரங்களில் அமைந்துள்ள வன சுற்றுலாத்தலமான பேரிஜம் ஒதுக்கி சென்று அங்குள்ள அமைதி பள்ளத்தாக்கு , தொப்பி தூக்கும் பாறை, மதிக்கட்டான் சோலை, பேரிஜம் ஏரி போன்ற இயற்கை அழகை கண்டு ரசித்து வருவது வழக்கமான ஒன்றாகும்.
இந்நிலையில் பேரிஜம் ஏரி பகுதியில் சுற்றி திரிந்த ஒற்றைக் காட்டி யானை பேரிஜம் ஏரியில் நீர் அருந்தி பேரிஜம் ஏரி பகுதியில் சுற்றித் திரிவதால் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பேரிஜம் ஏரிப் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதித்துள்ளது கொடைக்கானல் வனத்துறையினர்.
இதையும் படிங்க: பஞ்சாயத்து பேசணும் வாங்க!! செங்கோட்டையன் பற்ற வைத்த நெருப்பு! இபிஎஸ்க்கு அமித்ஷா செக்!
இதையும் படிங்க: மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியானார் எம்.சுந்தர்! பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் அஜய்குமார்...