தஞ்சாவூர் சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்தார். தமிழ்நாட்டின் உணவு கொள்கலனாக அறியப்படும் காவிரி டெல்டா பகுதி, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் சோகத்தை சந்தித்துள்ளது. இயல்பை விட நான்கு நாட்கள் முன்கூட்டியே தொடங்கிய மழைப்பொழிவு, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் புயல் வேகத்தில் பெய்து, ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்கள் தண்ணீரில் மூழ்கியது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் காட்டி வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டதுடன் விவசாய நிலங்கள் சேதம் மற்றும் போக்குவரத்து குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நெல்மணிகள் நீரில் மூழ்கியதுடன் அறுவடை செய்த நெருப்பயிர்கள் கொள்முதல் செய்யப்படாமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தஞ்சாவூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தஞ்சாவூர் காட்டூர் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.
இதையும் படிங்க: கடனில் டெல்டா விவசாயிகள்… கருணை காட்டுங்க! நிவாரணம் வழங்க பிரேமலதா வலியுறுத்தல்…!
மழையில் முளைத்த நெல் மணியை பார்த்த எடப்பாடி பழனிச்சாமிடம் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். நெல் மூட்டைகள் குறைந்த அளவில் கொள்முதல் செய்யப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெல்டா விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளி! தீயசக்தி திமுக... விளாசிய இபிஎஸ்...!