தமிழ்நாட்டில் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, பாட்டாளி மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள் இணைந்தன. இந்தக் கூட்டணி உருவாக்கப்படும் போது, தேமுதிகவுக்கு 4 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மேலும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி (ராஜ்யசபா சீட்) வழங்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாகவும், வாய்மொழியாகவும் உறுதியளிக்கப்பட்டதாக தேமுதிக தரப்பு கூறுகிறது.
இந்த ஒப்பந்தம், 2024 தேர்தல் பேச்சுவார்த்தைகளின் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 18 மாநிலங்களவை உறுப்பினர்களில் 6 பேரின் பதவிக்காலம் 2025 ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்காக, இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தது. அதிமுக தனது வேட்பாளர்களாக வழக்கறிஞர் ஐ.எஸ்.இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் தனபால் ஆகியோரை அறிவித்தது. ஆனால், தேமுதிகவுக்கு எந்தவொரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்படவில்லை.

இது, தேமுதிக தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியது, எழுத்துப்பூர்வமாக எடப்பாடி பழனிச்சாமி தங்களுக்கு உறுதி அளித்ததாக அப்போதே பிரேமலதா தெரிவித்திருந்தார். மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்காதது சர்ச்சில் ஏற்படுத்தி வந்த நிலையில், தேமுதிக நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமி முதுகில் குத்து விட்டதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2026 தேர்தலில் திமுக அரசை மக்கள் தூக்கி எறிவார்கள்.. கடுமையாக சாடிய அதிமுக..!!
எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் கூட்டணி குறித்து ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்து விடுவதில்லை என்றும் அதேபோல தான் தேமுதிகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிடாமல் கையெழுத்திட்டதாகவும் தெரிவித்தார். அதனால்தான் நாம் ஏமாந்து விட்டோம் என்று பிரேமலதா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: மனசாட்சி இல்லையா? அஸ்தியை கரைக்குற மாதிரி மனுக்கள் கொட்டி இருக்கீங்க! இபிஎஸ் கண்டனம்..!