அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் குறித்து அறிவிக்கப்பட்ட விவரங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடிய அரசியல் நிகழ்வாக உருவெடுத்துள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுகவின் தலைமையில் NDA கூட்டணி உருவாகியுள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார்.
அவர் ஏற்கனவே பல கட்டங்களில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை ஒருங்கிணைத்து, மக்களிடையே ஆதரவு திரட்டி வரும் வேளையில், சமீபத்தில் சென்னையில் இருந்து முறைப்படி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். மார்ச் 25 அன்று சென்னை மயிலாப்பூர் தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி தனது பிரச்சாரத்தை ஜெயலலிதா பாணியில் தொடங்கினார். கபாலீஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த பின்னர், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த நிகழ்வு அதிமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. மயிலாப்பூரில் தொடங்கிய இந்த பிரச்சாரம், அதிமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான அதே நாளில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மார்ச் 27 அன்று இரண்டாம் கட்டமாக 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அவர் வெளியிட்டார்.
இதையும் படிங்க: திருச்சுழி தொகுதியால் பிரச்சனை..! EPS வீட்டை முற்றுகையிட்ட அதிமுகவினர்..! பதற்றம்..!!
இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் இரண்டாம் தேதி தனது இரண்டாம் வட்ட சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிச்சாமி தொடங்குகிறார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். குறிப்பாக ஏப்ரல் 8 மற்றும் ஒன்பதாம் தேதிகளில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: நெருங்கும் தேர்தல்... NDA கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு...!