2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில்பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு தொகுதிகளுக்கு சென்று அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

உத்திரமேரூர் பாமக வேட்பாளர் மகேஷ் குமார் மற்றும்காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் சோமசுந்தரம் ஆகியோரை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியால் காஞ்சிபுரம் அதிர்கிறது என்றும் மக்களின் ஆரவார எழுச்சி மற்றும் மக்களின் மகிழ்ச்சியை பாருங்கள் என முதல்வர் எனவும் தெரிவித்தார். இப்போது இருப்பது திமுக கட்சி இல்லை என்றும் கருணாநிதியின் குடும்ப கட்சி எனவும் தெரிவித்தார். பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணில் நிற்பதே பாக்கியம் என்றும் காஞ்சிபுரம் அதிமுக கோட்டை எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மகளிரை அவமதிக்கிறது அதிமுக..!! EPS மன்னிப்பு கேட்கணும்..! திமுக பெண் நிர்வாகிகள் கொந்தளிப்பு..!
பிற அறிஞர் அண்ணா கண்ட கனவுகளை நினைவாக்க எம்ஜிஆர் பல திட்டங்களை கொண்டு வந்ததாக தெரிவித்தார். அண்ணா ஆரம்பித்த திமுக கருணாநிதி குடும்பமாக மாறிவிட்டது என்றும் கருணாநிதி முன்னேற்ற கழகம் என்று மாற்றிவிட்டார்கள் எனவும் குடும்பத்தின் ஆட்சியில் சிக்கி திமுக சின்னா பின்னம் ஆகி ஆகிவிட்டது என்றும் தெரிவித்தார். திமுக கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி என்றும் விமர்சித்தார்.
இதையும் படிங்க: ரூ.5,000 கோடி சம்பாதிக்க ப்ளான் போட்டாரு இபிஎஸ்!! விஜய் ஆதரவுக்கு ஸ்கெட்சும் போட்டாரு! செங்கோட்டையன் பகீர்!