தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முக்கியத் தரவுகள் இணையத் தாக்குதல் மூலம் திருடப்பட்டு டார்க் வெப்-ல் கசிந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார். அணுமின் நிலையத்தின் அலகுகளின் கட்டமைப்பு, உபகரணங்கள் வழங்குநர்கள், காப்பீடு உள்ளிட்ட முக்கியத் தகவல்கள் சைபர் தாக்குதல் மூலம் திருடப்பட்டு சட்டவிரோத இணையத்தில் கசிந்திருப்பது நாடு முழுவதும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தகவல் திருட்டை, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் வடிவமைப்புப் பணிகளில் ஈடுபட்ட ரிலையன்ஸ் நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது. இது விவகாரத்தின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.வல்லுநர்களின் கருத்துப்படி, இந்தக் கசிந்த தரவுகள் பாதுகாப்பு ரீதியாக மிக முக்கியமானவை. அவை தவறான கைகளுக்குச் சென்றால், நாட்டின் முக்கிய கட்டமைப்புகளை குறிவைக்கும் செயல்களுக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது. இந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்த முடியாது என்று வேல்முருகன் சுட்டிக்காட்டினார்.

மக்களின் அச்சம் உண்மை என்பதை நிரூபிக்கும் சம்பவம்கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்கப்படக் கூடாது என்று ஆண்டாண்டு காலமாகப் போராடிய மக்களின் மிகப்பெரிய அச்சம், “என்றாவது ஒரு நாள் பாதுகாப்பில் சிறியத் தவறு ஏற்பட்டாலும் அதன் விளைவுகளை பல தலைமுறைகள் அனுபவிக்க வேண்டியிருக்கும்” என்பதுதான். இதனால்தான் தமிழ்நாடு முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து போராடினர். இன்று வெளியாகியுள்ள இந்தத் தகவல் கசிவு, அந்த மக்களின் அச்சம் வெறும் கற்பனை அல்ல என்பதை நினைவூட்டுகிறது என்று அவர் கூறினார்.மக்களின் பாதுகாப்புக் கவலைகளை இலகுவாக எடுத்ததன் விளைவு இதுவா என்ற கேள்வி இப்போது வலுவாக எழுகிறது. இப்படியான சைபர் தாக்குதல் கூடங்குளத்தில் முதன்முறையல்ல. 2019-ஆம் ஆண்டிலும் சைபர் தாக்குதல் நடைபெற்றது. அப்போது முதலில் மறுத்த ஒன்றிய அரசு, பின்னர் தாக்குதலை ஒப்புக்கொண்டது.
இதையும் படிங்க: CM விஜய் பெரம்பூர் வந்தபோது கலந்து கொள்ளாதது ஏன்.? பதில் சொல்ல முடியாமல் நழுவிச் சென்ற மேயர் பிரியா..!
அதிலிருந்து எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளப்படவில்லையா? பாதுகாப்பு அமைப்புகள் பலப்படுத்தப்படவில்லையா? என்ற கேள்விகளுக்கு இன்று பதில் தேவைப்படுகிறது என்றார் வேல்முருகன்.அணுமின் நிலையம் சாதாரண தொழிற்சாலை அல்லஅணுமின் நிலையம் என்பது ஒரு சாதாரணத் தொழிற்சாலை அல்ல. அதன் பாதுகாப்பில் ஏற்படும் எந்தச் சீர்கேடும் மக்களின் மனநிம்மதியையும், தேசிய பாதுகாப்பின் மீதான நம்பிக்கையையும் சிதைக்கும். இப்படிப்பட்ட முக்கியத் தரவுகள் திருடப்படும் அளவுக்கு பாதுகாப்பு பலவீனமாக இருந்திருந்தால், அதற்குப் பொறுப்பேற்க வேண்டியது யார்? மக்களின் உயிரையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியவர்கள், தகவல் பாதுகாப்பைக் கூட உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்தால், அது மிகப்பெரிய நிர்வாகத் தோல்வியாகும் என்று அவர் வலியுறுத்தினார்.அணுசக்தி போன்ற அதி முக்கியத் துறைகளில் அலட்சியம் என்பது சாதாரண தவறல்ல. அதன் விளைவுகள் பேராபத்தாக மாறக்கூடியவை என்று எச்சரித்த வேல்முருகன், ஒன்றிய அரசு இந்த விவகாரம் குறித்து உடனடியாக வெளிப்படையான விளக்கத்தை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: த.வெ.க. அமைச்சரவை விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மோதல்... கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு?