சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்த பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
கரூர் பெருந்துயரம் நிகழ்ந்தவுடன் அவசரமாக பதற்றத்துடன் உடற்கூறாய்வு செய்யப்பட்டதாகவும், மூன்று மேஜைகளில் 39 சடலங்களுக்கு குறுகிய நேரத்தில் உடற்கூறு ஆய்வு செய்தது எப்படி என்றும் கேட்டார். இவ்வளவு வேகமாக எப்படி உடற்கூறு ஆய்வு செய்து இருக்க முடியும் என்றும் சந்தேகத்தை கிளப்பினார்.
ஒரு நபர் ஆணையத்துக்கு எந்த உதவியும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்கு ஒரு நபர் ஆணையத்திற்கு உதவியாளர் கூட இல்லை எனவும் தெரிவித்தார். நான் காலை 8 மணிக்கு கரூருக்கு சென்றபோது 31 உடல்கள் உடற்குறைவு செய்யப்பட்டு இருந்ததாக குறிப்பிட்டார். மூன்று டேபிள்கள் மூலம் 25 மருத்துவர்கள் உடற்புறாய்வு மேற்கொண்டது எப்படி என்றும் கேட்டார்.
இதையும் படிங்க: திமுகவின் திட்டமிட்ட சதி… தவெகவை முடக்க முயல்கிறார்கள்… ஆதவ் அர்ஜுனா கடும் குற்றச்சாட்டு…!

அரசு அதிகாரிகள் பேட்டி கொடுத்த பிறகு ஒரு நபர் ஆணையம் எப்படி சுதந்திரமாக செயல்படும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் பிரச்சாரத்திற்கு வேலுச்சாமி புறத்தை ஒதுக்கியத சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் கரூர் சம்பவத்தில் மர்மம் இருப்பதாகவும் கூறினார். முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் 41 பேரின் உயிர் பறிபோயிருக்காது என்றும் அரசின் பாதுகாப்பு குறைபாடு தான் காரணம் என்று தெரிவித்தார். போதிய பாதுகாப்பு கொடுக்காதது மற்றும் அலட்சியத்தின் காரணமாக 41 உயிர்கள் பறிபோனதாக கூறினார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோருக்கு கரூர் ரவுண்டானா பகுதியில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் விஜய்க்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்பட்டது என கேள்வி எழுப்பினார். கிட்னி முறைகேடு உறுதி செய்யப்பட்ட பிறகும் அந்த வழக்கில் ஏன் அவசரம் காட்டவில்லை என திமுகவை நோக்கி கேள்வி எழுப்பினார். கிட்னி மோசடி சம்பவத்தில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லையே ஏன் என்றும் கேட்டார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் விஜய்... கண்டிஷன் ஓகேவா இபிஎஸ்? டி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி