அதிமுகவில் வெடித்துள்ள உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதை இன்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நடத்திய செய்தியாளர் சந்திப்பு மூலம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் முதலமைச்சராக வேண்டுமென மக்கள் விரும்பினர். ஆனால் திமுக ஆதரவோடு ஆட்சி அமைக்க எடப்பாடி திட்டமிட்டார். அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக என்ற கட்சியே திமுக எதிர்ப்பில் பிறந்தது. நாம் திமுகவை கடுமையாக எதிர்த்த கட்சி. நாம் எப்படி திமுக உடன் கூட்டணி வைக்க முடியும். திமுக நம்முடைய கொள்கை ரீதியிலான எதிர்க்கட்சி. அப்படி இருக்க அவர்களுடன் எப்படி இணைய முடியும். அப்படி இருக்க அவர் திமுக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கூறினார். இபிஎஸ் முடிவை கேட்டு அதிமுக எம்எல்ஏக்கள் அதிர்ச்சி அடைந்தோம் எனக்கூறி மிகப்பெரிய குண்டையே தூக்கிப்போட்டார்.
அதிமுகவின் அடிப்படை தொண்டர்கள் கூட ஜீரணிக்க முடியாத இந்த குற்றச்சாட்டு மூலம் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்துவிட்டது எஸ்.பி.வேலுமணி அண்ட் சி.வி.சண்முகம் டீம் என்கின்றனர் அரசியல் விமர்சர்கள். இதனிடையே இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி.சண்முகம் கடைசியாக முன்வைத்த குற்றச்சாட்டு தான் அதிபயங்கரமானது. அதிமுக தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருவது தொடர்பாக அதிமுக பொதுக்குழுவை கூட்டி ஆலோசிக்க வேண்டுமென பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அவர் பொதுக்குழுவை கூட்டுவார்... கூட்டி தான் ஆக வேண்டும் என சி.வி.சண்முகம் தெரிவித்தது எடப்பாடி பழனிசாமிக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
ஏனெனில் 2022ம் ஆண்டு இதேபோல் ஒரு பொதுக்குழுவை கூட்டித்தான் அதிமுக பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதோடு, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். தற்போது மீண்டும் பொதுக்குழுவைக் கூட்டி கடந்த 11 தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமியால் தான் தோல்வியுற்றதாக கூறி, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து இபிஎஸை வெளியேற்ற சி.வி.சண்முகம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: செங்குத்தாக பிளவுபட்ட அதிமுக..! பரம எதிரி திமுகவுடன் சேர "வற்புறுத்திய EPS"..! எகிறும் குற்றச்சாட்டுகள்..!
இதற்கான வேலையில் இறங்கியுள்ள சி.வி.சண்முகம், அதிமுகவில் தனக்கு ஆதரவாக உள்ள எம்.எல்.ஏ.க்களிடம் ரகசியமாக கையெழுத்து பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: வெல்வாரா? வீழ்வாரா? ... பிறந்தநாளில் எடப்பாடி பழனிசாமிக்கு பேரிடி... அதிமுகவினருக்கு இன்று காத்திருக்கும் ஷாக்கிங் நியூஸ்...!